கொரோனா வந்த பிறகு இந்திய அணியில் ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது ; புஜரா ஓபன் டாக் ;

0

வருகின்ற 26ஆம் தேதி முதல் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இதுவரை  டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியை வென்றதே இல்லை.

சமீபத்தில் தான் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதில் விராட்கோலி, கே.எல்.ராகுல், பும்ரா, புஜரா, முகமது சிராஜ், மயங்க் அகர்வால், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி, ரிஷாப் பண்ட், சஹா,ரவிச்சந்திரன் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஷர்டுல் தாகூர், சிராஜ் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதனால் அனைத்து வீரர்களும் இப்பொழுது இந்தியாவில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளனர். இப்பொழுது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, இது இந்திய அணிக்கு மட்டுமின்றி விராட்கோலிக்கும் முக்கியமான போட்டி தான் இது.

ஏனென்றால் சமீபத்தில் தான் விராட்கோலியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விளக்கியுள்ளது பிசிசிஐ. அதனால் விராட்கோலி மிகவும் சோகத்தில் மூழ்கினார். அதனால் விராட்கோலி மீண்டும் அதிரடியான வீரர் என்பதை காண்பிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, விராட்கோலி தலைமையிலான இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிபெறுமா ?

இப்பொழுது கொரோனா காலம் என்பதால் எந்த நாட்டுக்கு சென்றாலும் நிச்சியமாக குறிப்பிட்ட நாட்கள் தனிமையில் இருந்து பிறகு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதில் நெகட்டிவ் வந்த பிறகு தான் போட்டியில் விளையாடவே முடியும். இந்த போட்டியை பற்றி பேசிய இந்திய அணியின் டெஸ்ட் வீரரான புஜரா அளித்த பேட்டியில் ;

கொரோனா என்பதால் அனைத்து வீரர்களும் ஒன்றாக இருக்க கூடிய நேரம் என்பது அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, ,இப்பொழுது சாப்பிடும் போது கூட வீரர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க கூடிய சூழல் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் புஜரா…!!! தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?? அணியில் இடம்பெற போகின்ற முக்கியமான 11 பேர் யாராக இருக்கும் ?? உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் Comments பண்ணுங்க… !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here