கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது.
நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 157 ரன்களை அடித்தது. பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய. அதில் 18.5 ஓவர் முடிவில் 162 ரன்களை அடித்து 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றுள்ளது.
எப்பொழுது ஒரு போட்டி தொடங்கும்போது அல்லது போட்டியில் இடம்பெற்றுள்ள வீரர்களை பற்றி கருத்துக்களை பகிர்வது வழக்கம். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் சில கருத்தை பகிர்ந்துள்ளார். அதில் ” கே.எல்.ராகுல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும். அதனால் தொடக்க வீரராக இவர் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும்.
எனக்கு தெரிந்து இஷான் கிஷனை தயார் செய்ய நிலையில் இல்லை. அவர் எப்பவோ ரெடி தான். சரியாக பயன்படுத்தினால் பயம் இல்லாமல் ரன்களை அடிப்பார். சமீபத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய தொடங்கிவிட்டார். அது அவருக்கு சிறப்பாகவும் அமைந்தது. அதனால் நிச்சியமாக வலுவான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
அதனால் தொடக்க வீரரான இஷான் கிஷான் இடம்பெற்றால் சிறப்பான தொடக்க ஆட்டம் மற்றுமின்றி அதிரடியான ஆட்டத்தை அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளார் ஹர்பஜன் சிங். ஐபிஎல் டி20 மெகா ஏலத்தில் 2022 யில் இஷான் கிஷனை மும்பை இந்தியன்ஸ் அணி 15. 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. அதனால் நிச்சியமாக இனிமேல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தான் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.