இந்திய கிரிக்கெட் அணியில் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது ; இவருடைய பவுலிங் அப்படி..!! ; இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

நேற்று கொல்கத்தாவில் ஈடன் கார்டன் இருக்கும் மைதானத்தில் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் முதல் டி20 போட்டியில் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 157 ரன்களை அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதில் அதிகபட்சமாக பூரான் 61, மயர்ஸ் 31 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 158 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி.

ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா 19 பந்தில் 40 ரன்களை அடித்தார். பின்னர் இஷான் கிஷான், விராட்கோலி, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் தொடர்ந்து ஆட்டம் இழந்தனர். பின்னர், சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் போன்ற இரு வீரர்களும் ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதில் ரோஹித் சர்மா 40, இஷான் கிஷான் 35, விராட்கோலி 17, ரிஷாப் பண்ட் 8, சூர்யகுமார் யாதவ் 34, வெங்கடேஷ் ஐயர் 24 போன்ற ரன்களை அடித்தனர். அதனால் 18.5 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 162 ரன்களை அடித்தது இந்திய. அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற இந்திய அணி இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய அணி.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இந்தியா அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; இந்த போட்டியில் வெற்றி பெற்றது சந்தோசமாக உள்ளது. எங்கள் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதனால் இன்றைய போட்டியில் அதனை நாங்கள் கற்றுக்கொண்டுள்ளோம். இருப்பினும் இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி எதிர் அணியின் பேட்ஸ்மேன்களை ரன்களை அடிக்க விடாமல் தடுத்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக ரவி பிஷோனி இந்திய அணியில் அறிமுகம் ஆகி முதல் போட்டியில் விளையாடினார். அதனை பார்க்கும்போது அருமையாக இருந்தது. ரவி ஒரு திறமையான பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகமில்லை. அவரிடம் பல மாற்றங்கள் இருப்பதை நான் பார்த்தேன். அதுமட்டுமின்றி அவர் எந்த சூழ்நிலைகளிலும் பவுலிங் செய்ய முடியும் என்றதால் அது எங்களுக்கு சாதகமாக மாறியது. நிச்சியமாக அவருக்கு (ரவி பிஷோனி) க்கு இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் .

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்து 17 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ரவி பிஷோனி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here