டி-20 உலகக்கோப்பை போட்டியில் இவரது பெயர் உறுதி தான் ; அதில் மாற்றமே இல்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று இரவு சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரரான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. தொடர்ந்து விக்கெட்டை மட்டுமே இழந்தனர். ஆனால் தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டிய போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர்.

அதனால் இறுதி வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி 198 ரன்களை அடித்தது. பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்க வீரரான பட்லர் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு வலுவாக மாறியது. இருப்பினும், இங்கிலாந்து வீரர் சிலர் முடிந்தவரை ரன்களை அடித்தனர்.

ஆனால் இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியால் 148 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்பொழுது நடைபெறும் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பதை வைத்து தான் உலகக்கோப்பை 2022 போட்டிக்கான இந்திய அணி முடிவாகும்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாபர் வாசிம் கூறுகையில் : “சர்வதேச போட்டிகளில் எந்த பவுலர் ஸ்விங் பவுலிங் செய்தால் நிச்சியமாக அதனை அடிக்க பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக தான் இருக்கும். எனக்கு தெரிந்து எத்தனை பவுலர்கள் அப்படி பவுலிங் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

சிறப்பாக விளையாடி கம்பேக்கொடுத்துள்ளார். பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் – ல் அவ்வப்போது ரன்களை அடித்து வருகிறார். அதனால் எனக்கு தெரிந்து நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவரது பெயர் உறுதியாக இருக்கும். இந்த ஆண்டு உலககோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அங்கு ஸ்விங் ஆகுமா என்று தெரியவில்லை. ஒருவேளை ஸ்விங் ஆனால் நிச்சியமாக புவனேஷ்வர் குமார் நிச்சியமாக அணியில் இருப்பார் என்று கூறியுள்ளார் வாசிம்.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் புவனேஷ்வர் குமார் இடம்பெற்றால் இந்திய அணிக்கு பலமாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்துகளை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள் ..!!