உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் நிச்சியமாக விளையாட போவதில்லை ; வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

0

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் நிச்சியமாக விளையாட போவதில்லை ; வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் ;

உலகக்கோப்பை 2021:

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறுவதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடிய காரணத்தால் அரை இறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது..!

உலகக்கோப்பை 2022:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலகக்கோப்பை போட்டி 2022 வருகின்ற அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் இடப்பட்டு வருகின்றனர்.

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதனால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிமாகவே உள்ளது.

அதில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி நிச்சியமாக இந்திய அணியின் தேர்வாளர்கள் பெயர் பட்டியலில் இடம்பிடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச டி-20 போட்டிகளில் வெறும் 17 போட்டிகளில் மட்டுமே விளையாடி 18 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஷமி.

அதனால் உலகக்கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் விளையாட அவர் பிட் ஆக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு தான். அதனால் அணியின் தேர்வாளர்கள் ஷமி -யை விட இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்து உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வைக்க உள்ளனர்.

ஒருவேளை ஷமி -க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணியின் அனுபவம் வாய்ந்த வீரராக தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி-20 போட்டிக்கான இந்திய அணியில் உள்ளார்.

முகமத் ஷமி-க்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா ? உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் முகமத் ஷமி இடம்பெற வேண்டுமா ? என்ன காரணம் என்பதை COMMENTS செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here