இனிமேல் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது ; அணியில் சும்மா தான் இருக்க போறாங்க..! நட்சத்திர வீரர்களுக்கு வந்த சோதனை ; இந்திய முன்னாள் வீரர் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சரியாக விளையாட வீரர்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வருகிறது.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார் ரஹானே மற்றும் புஜரா ஆனால் இப்பொழுது அவர்கள் விளையாடும் விளையாட்டு முன்பு போல் இல்லை என்று தான் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் சமீப காலமாக ரன்களை அடிக்காமல் விரைவாக ஆட்டம் இழந்து வருகின்றனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஹானே மற்றும் புஜராவின் ஆட்டம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆன ஷ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் சதம் அடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு சவுத் ஆப்பிரிக்க அணிக்கு இடையேயான போட்டியில் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான நிகில் சோப்ரா அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கான வீரர்களை பற்றி அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் ” சமீப காலமாக இந்திய அணியில் புஜரா , ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா போன்ற மூவரும் சரியாகவே விளையாடுவது இல்லை. இவர்களது விளையாட்டை பார்க்கும்போது கூடிய விரைவில் இவர்கள் மூவருக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது.

இந்திய அணியில் பல சாதனைகளை செய்துள்ளார்கள், ஆனால் இனிமேல் அவர்கள் பேக்அப் ப்ளேயர் மட்டும் தான் , ஏதாவது தேவை என்ற போதில் மட்டும் இவர்களை பயன்படுத்த வேண்டும். இந்திய அணியின் தேர்வு குழு என்ன செய்ய போகிறது என்று தெளிவாக தெரிகிறது. வருகின்ற ஆண்டிற்கான சம்பள பட்டியலை பற்றிய பேசிய நிகில் ;

ரிஷாப் பண்ட் நிச்சியமாக A யில் இருந்து A+ க்கு முன்னேற போகிறார். ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் பட்டேல், ஹனுமா விஹாரி, சுமன் கில் மற்றும் தீபக் சஹார் போன்ற வீரர்கள் B க்கு தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, யுஸ்வேந்திர சஹால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் வருகின்ற ஐசிசி உலகக்கோப்பை 2023ஆம் ஆண்டு போட்டியில் விளையாடுவார்கள் என்று கூறியுள்ளார் நிகில் சோப்ரா…!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here