விராட், தோனியிடம் இருக்கும் அந்த ஒரு பலம் ரோஹித் ஷர்மாவிடம் இல்லை ; என்ன செய்ய போகிறார் ரோஹித் ? முன்னாள் இந்திய வீரர் உறுதி ;

இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் அளித்த பேட்டியில் ரோஹித் சர்மா எதிர்கொள்ள போகும் ஒரு சிக்கலை பற்றி பேசியுள்ளார்.

இப்பொழுது ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமை தாங்கி பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். அதிலும் சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் தொடை தசை பிடிப்பு ஏற்பட்ட காரணத்தால் அவரால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

விராட்கோலி, தோனியிடம் இருக்கும் இரு விஷயம் ரோஹித் சர்மாவிடம் சரியாக இல்லை. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான அஜித் அகர்கர் ; எனக்கு தெரிந்து ரோஹித் சர்மா பிட்னெஸ் பிரச்சனையை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால் கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக ஓய்வு பெற்றுள்ளார்.

ஆனால் முன்பு இருந்த கேப்டனான விராட்கோலி மற்றும் தோனி ஆகிய இருவரும் மிகவும் வலிமையான வீரர்களாக வலம் வந்தனர். ஆனால் மிகவும் குறைவான போட்டிகளை மட்டுமே விளையாடாமல் இருந்தன. அதனால் அது நிச்சியமாக ரோஹித் சர்மாவுக்கு சவாலாக தான் இருக்கும். அனைத்து போட்டிகளிலும் விளையாடினால் நிச்சியமாக வலுவான அணியை உருவாக்க உதவியாக இருக்கும்.

இதில் ஒவ்வொரு வீரரும் எந்த நேரத்தில் எப்படி வீரர்கள் விளையாடுகிறார்கள் என்பது தெரியவரும். நிச்சியமாக விராட்கோலியை விட ரோகித் ஷர்மா இப்பொழுது பின்னால் தான் இருக்கிறார். ஆனால் திறமையான கேப்டன் தான், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமின்றி சர்வதேச போட்டிகளிலும் அவரது தலைவர் பதவியை வெளிப்படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார் அஜித் அகர்கர்.

கடந்த ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார். பின்னர் ஒருநாள் போட்டியில் இருந்து விராட்கோலியை வெளியேற்றினார்கள். இதனால் பல சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த சவுத் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வருகின்ற 6ஆம் தேதி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாட உள்ளனர். அதில் விராட்கோலி ஒரு ப்ளேயாராக விளையாட உள்ளார்.