சென்னை , மும்பை இல்லை ; ஐபிஎல் 2022 போட்டியில் இதுதான் அருமையான அணி..! வீரர்கள் மாஸ் பண்ண போறாங்க.. : முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உறுதி

கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கான ஏலம் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் லக்னோ மற்றும் குஜராத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதனால் தான் இந்த முறை மிகப்பெரிய அளவில் ஏலம் நடந்த உள்ளதாகவும் பிசிசிஐ கூறியது.

ஐபிஎல் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். ஐபிஎல் ஏலம் என்று வந்தால் போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருக்கும் என்பதில் தான் உண்மை. ஆமாம் ..! ஏனென்றால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்று ?

சென்னை, மும்பை, சன்ரைசர்ஸ், கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், பெங்களூர் போன்ற எட்டு அணிகளும் பல முறை போட்டிகளிலும் ஏலத்தில் பங்கேற்று வருகின்றனர். அதனால் அவர்களுக்கு நன்கு தெரியும் எப்படி அணியை உருவாக்க வேண்டுமென்று. ஆனால் புதிய இரு அணிகள் (லக்னோ மற்றும் குஜராத்) தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலை எழுந்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியில் கே.எல்.ராகுல், ரவி பிஷோனி மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற வீரர்கள் ஏலத்திற்கு முன்பே லக்னோ அணியால் கைப்பற்ற பட்ட வீரர்கள். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அளித்த பேட்டியில் ;

எனக்கு தெறிந்து புதிய அணியான லக்னோ சிறப்பாக ஏலத்தில் பங்கேற்று அணிகளை தேர்வு செய்துள்ளது தான் உண்மை. ஏனென்றால் அவர்களுக்கு இதுதான் முதல் ஐபிஎல் ஏலம் , ஆனால் மற்ற அணிகளுக்கு அப்படி இல்லை அவர்கள் என்ன தவறு கடந்த முறை செய்தார்கள் என்று திரும்பிப்பார்த்து அதனை சரிசெய்து வருகின்றனர்.

அதனால் எனக்கு தெரிந்து லக்னோ இந்த முறை சிறப்பாக அணியை தேர்வு செய்துள்ளது. அதனால் நான் 10க்கு 9 மதிப்பெண் கொடுக்குறேன். ஐபிஎல் 2022 ஏலத்தில் கைப்பற்றிய ஜேசன் ஹோல்டர், தீபக் ஹூடா, குர்னல் பாண்டிய, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்களால் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்ய முடியும்.

கிட்டத்தட்ட முக்கியமான கீ ப்ளேயர்கள் அனைவரும் அணியில் வந்துவிட்டனர். அதனால் பேட்டிங் மற்றும் பவுலிங் போன்ற இரு விஷயங்களை செய்து விளையாட முடியும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.

லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் விவரம் :

கே.எல்.ராகுல், அவேஷ் கான், மார்கஸ் ஸ்டோனிஸ், ஜேசன் ஹோல்டர், குர்னல் பாண்டிய, மார்க் வுட், டி-காக், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, ரவி பிஷோனி , துஷ்மந்த சமீரா, கிருஷ்ணப்பா கவுதம், அன்கிட் ராஜ்பூட், கரன் சர்மா, ஏவின் லெவிஸ் மற்றும் சில வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.