ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி செய்த முட்டாள் தனம் இதுதான்..! முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் உறுதி ; காரணம் இதுதான் ..!

ஐபிஎல் டி-20 போட்டிக்கான ஏலம் ஒருவழியாக நடைபெற்று முடிந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் தான் இந்த முறை பெங்களூரில் மெகா ஏலம் நடத்தப்பட்டது.

அதற்கு முன்பே மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று பிசிசிஐ கூறியது. இருப்பினும் ஏலத்தில் எந்த எந்த வீரர்கள் யார் கைப்பற்ற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தே கொண்டு வந்ததது. அதற்கான விடை இப்பொழுது கிடைத்துவிட்டது.

ஆமாம்…! ஏலம் என்ற நிலை வரும்போது அணியை எப்படி சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதை கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் தக்கவைத்து வீரர்களை தவிர்த்து நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அதனால் ஏலத்தில் வரும் வீரரை பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவரை கைப்பற்றுவது தான் சிறந்தது.

ஆனால் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி தவறிவிட்டதாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ராட் ஹோக் கூறியுள்ளார். இதனை பற்றி மேலும் பேசிய அவர், இங்கிலாந்து அணியின் வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர்-வை 8 கோடி விலை கொடுத்து வாங்கியது மிகவும் தவறு.

ஆமாம்..! அவருக்கு (ஜோஃப்ரா ஆர்ச்சர்) கடந்த 18 மாதங்களில் இரு முழங்கையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளது, எனக்கு தெரிந்து இது வேகப்பந்து வீச்சாளருக்கு மிகவும் மோசமான ஒன்று. அதுமட்டுமின்றி, பேட்டிங்-கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் உள்ளார்கள். ஆனால் 5வது இடத்தில யார் உள்ளார் ??

முமபை இந்தியன்ஸ் அணிக்கு தலைவலி ஆரம்பித்தது இடம் தான், பவுலிங் வீரர்களை தேர்வு செய்ததில். பும்ராவை தவிர்த்து டெப்த் பவுலிங் செய்வதற்கு சரியான வீரர் உண்ட என்று கேட்டால் சந்தேகம் தான். அதுமட்டுமின்றி பாண்டிய போல சிறந்த பினிஷர் இல்லை. எனக்கு தெரிந்து இதுதான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நடந்த மிகவும் ஏலமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ப்ராட் ஹோக்.

ஜோஃப்ரா ஆர்ச்சர் கு அறுவை சிகிச்சை செய்துள்ள காரணத்தால் அவரால் ஐபிஎல் டி-20 2022 யில் விளையாட முடியாது என்று உறுதியான தகவல் வெளியானது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அதிக விலையான 8 கோடி கொடுத்து வாங்கியது பலருக்கு அதிர்ச்சியாக உள்ளது…!

இதுக்காக நடந்த 14 சீசன் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது மும்பை, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் என்ன செய்ய போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்…!