விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கு இப்பொழுது முடிவு கிடைத்துவிட்டதா? ; முன்னாள் வீரர் ஆவேசம் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். அதில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இந்த முறை விராட்கோலிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி வருகிறார் ரோஹித் சர்மா. அதுமட்டுமின்றி , விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் உள்ளது என்று பல தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையா என்று கேட்டால் அது கேள்விக்குறியே ….!

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் ; விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். அதனால் இவர்கள் இருக்கும் இடையே மோதல், பேச்சுவார்த்தை இல்லை என்று பல தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதனை பற்றி அவர்கள் கவலைப்பட்டது இல்லை.

ஏனென்றால் அது உண்மையா தவறா இல்லையா என்பது தெரியும். அதுமட்டுமின்றி ரோஹித் ஷர்மா கேப்டனாக வெற்றி பெற கூடாது என்று விராட்கோலி நினைப்பார் என்று பல தவறான தகவல் வெளியாகியுள்ளது. அதனை கேட்டால் கடுப்பாக உள்ளது. ஆமாம்…! அதுமட்டுமின்றி, இப்பொழுது அவர் பேட்டிங் செய்து ரன்களை அடிக்கவில்லை என்றால், அணியில் இருந்து விலகிவிடுவார் என்று கூறி வருகின்றனர்.

இந்த மாதிரி தேவை இல்லாத கதை சொல்லும் மக்களை பற்றி கவலை படவே கூடாது. விராட்கோலி இன்னைக்கு வேண்டுமானால் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்திருக்கலாம், ஆனால் அவர் ரோஹித் சர்மா கேப்டன் கீழ் அல்லது வேறு எந்த கேப்டன் கீழ் விளையாடினாலும் அவர் ரன்களை அடிப்பார் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட்கோலி 4 பந்தில் 8 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். இப்பொழுது இந்திய அணி 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. நாளை மறுநாள் 9ஆம் தேதி அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர்.