இவர் மட்டும் இல்லையென்றால் அவ்வளவு தான் , நல்ல வேலை இவர் இப்படி பவுலிங் செய்ததால் தான் தப்பித்தோம் ; சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் பேட்டி ;

நேற்று முதல் ஒருநாள் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் பவுலர் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 176 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. 177 ரன்கள் மிகவும் குறைவான அளவில் இருந்த காரணத்தால் 28 ஓவர் முடிவில் 178 ரன்களை அடித்தது இந்திய.

அதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணியில் முன்னிலையில் உள்ளது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமே இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் தான். ஆமாம்..! வாஷிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகிய இருவரும் கிட்டத்தட்ட 7 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரரான பிராண்டன் கிங் மற்றும் ப்ராவோ விக்கெட்டை கைப்பற்றினார் வாஷிங்டன் சுந்தர். அதனால் இந்திய அணிக்கு ஆறுதலாக இருந்தது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹால் கூறுகையில் ; சிறப்பான ஆட்டமாக அமைந்துள்ளது. தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டை கைப்பற்றினார் வாஷிங்டன் சுந்தர்.

அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அப்பொழுது நான் முடிவு செய்தது ஒன்று தான். வாஷிங்டன் சுந்தர் உருவாக்கிய அழுத்தத்தை நான் தொடர வேண்டும் என்பது தான். அப்பொழுது தான் விராட்கோலி மற்றும் ரோஹித் சர்மா எங்களிடம் பேசினார்கள். Pace  தான் ரொம்ப முக்கியம் என்று கூறினார்கள். அதனால் அவர்கள் சொன்ன படி பவுலிங் செய்ய தொடங்கினேன்.

அதுமட்டுமின்றி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் நான் சிறப்பாக பவுலிங் செய்யவில்லை. அதனால் இந்த முறை நான் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்று மட்டுமே நான் நினைத்தேன் என்று கூறியுள்ளார் யுஸ்வேந்திர சஹால். முதல் ஒருநாள் போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றுள்ளார் யுஸ்வேந்திர சஹால்.