கடைசியாக இப்படி ரன்களை கொடுத்துவிட்டார் ; தோல்விக்கு காரணம் இவர் தான்; ரோஹித் ஓபன் டாக் ;

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டி கொண்ட தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் இதுவரை இரு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். நேற்று நடந்த இரண்டாவது போட்டி வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.

இரண்டாவது போட்டியின் விவரம்:

டாஸ் :

8 மணிக்கு நடக்கவேண்டிய போட்டி, தாமதமாக 11 மணிக்கு தான் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல பவுலிகை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் மோசமான பேட்டிங் ;

முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு மோசமான பேட்டிங் அமைந்தது தான் முக்கியமான காரணம். ஏனென்றால் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக இருந்தது. ஏனென்றால் முதல் போட்டியில் அவர் தான் அதிரடியாக விளையாடி 60க்கு மேற்பட்ட ரன்களை குவித்தார்.

ஆனால் 6.3 ஓவரில் முதல் முக்கியமான 4 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணியால் சரியாக விளையாட முடியாமல் போனது தான் உண்மை. ஏனென்றால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பவுலர் Obed McCoy வீசிய பவுலிங் அப்படி. சிறப்பாக பவுலிங் செய்து 6 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதனால் இறுதிவரை விளையாடிய இந்திய அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 138 ரன்களை அடித்தனர்.

அதில் அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 24, ஹர்டிக் பாண்டிய 31, ரவீந்திர ஜடேஜா 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 10 ரன்களையும் அடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் ;

பின்பு 139 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி. தொடக்க வீரரான பிராண்டன் கிங் மற்றும் டேவன் தாமஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 141 ரன்களை அடித்து 5 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

ரோஹித் சர்மா ஓபன் டாக் :

தோல்வியை பற்றி பேசிய இந்திய அணியின் ரோஹித் சர்மா கூறுகையில் :” முதலில் எங்களுக்கு நன்கு தெரியும் இந்த ரன்கள் நிச்சியமாக வெற்றி கிடைப்பது சிரமம் தான் என்று. நாங்க யாரும் சரியாகவே பேட்டிங் செய்யவில்லை. இந்த மைதானத்தில் இருக்கும் பிட்ச் எல்லாம் சிறப்பாக தான் இருக்கிறது. நாங்க தான் நினைத்த மாதிரி விளையாடவில்லை.”

“இது எல்லாம் நடப்பது சாதாரணம் தான். நீங்க ஒரு அணியாக பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றியை மட்டுமே எதிர்பார்க்க முடியாது. ஆனால் இதில் இருந்து நிச்சியமாக கற்றுக்கொண்டு வருவோம். புவனேஸ்வர் குமார் அணிக்காக என்ன செய்வார் என்று தெரியும். ஏனென்றால் கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியில் தான் விளையாடி வருகிறார்.”

“ஆனால் அவேஷ் கான், அர்ஷதீப் சிங் எப்படி பவுலிங் செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாத ஒரு விஷயம். அவர்களிடம் திறமை உள்ளது, அதனை ஆதரித்து கொண்டு தான் இருக்கிறோம். எனக்கு தெரிந்து இறுதியாக 13 ரன்களை கொடுத்தது தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.”

“இருப்பினும் நாங்கள் பேட்டிங்-ல் நடக்கும் தவறுகளை பார்க்க வேண்டும். இப்படி விளையாட ஆசைப்படுகிறோம். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதிரடியாக விளையாட வேண்டும். ஒரு போட்டியில் தோல்வியை பெற்றதால் அடிக்கடி அணியை மற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் ரோஹிட் சர்மா.”