இந்திய அணியில் இவரை நான் எப்பொழுதும் மறக்கவே மாட்டேன் ; பாக்கிஸ்தான் வீரர் பேட்டி ;முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதனால் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை அடித்துள்ளது இந்திய அணி. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சரியாக ரன்களை அடிக்காமல் முதல் 2 ஓவரில் இரு விக்கெட்டை இழந்தது இந்திய. அதனால் சற்று ரன்களை அடிக்க முடியாமல் கடினமாக இருந்தது.

பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அதனால் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையவில்லை. இருந்தாலும் இறுதி வரை விராட்கோலி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு ரன்களை அடித்து கொடுத்தார். அதில் கே.எல்.ராகுல் 3, ரோஹித் சர்மா 0, விராட்கோலி 57, சூர்யகுமார் யாதவ் 11, ரிஷாப் பண்ட் 39, ரவீந்திர ஜடேஜா 13, ஹார்டிக் பாண்டிய 11 மற்றும் புவனேஸ்வர் குமார் 5 ரன்களை அடித்துள்ளனர்.

பின்னர் 152 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி. இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை கைப்பற்ற முடியமால் இறுதி ஓவர் வரை தினறிக்கொண்டு இருந்தனர். அதனால் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 9 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி.

போட்டி முடிந்த பிறகு தோனி மற்றும் விராட்கோலி-யின் பாகிஸ்தான் வீரர்கள் சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி பாகிஸ்தான் வீரர் Shahnawaz Dahani அளித்த பேட்டியில் ; இன்றைய போட்டி என்னால் மறக்க முடியாத ஒரு போட்டி தான்.

அதுவும் இந்தியா அணியை வென்றது. அதுமட்டுமின்றி எனக்கு இந்திய அணியில் மிகவும் பிடித்த வீரர் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான். அவரை என்றும் நான் மறக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார். என்னதான் எதிர் நாட்டு வீரர்களாக இருந்தலாம் சக வீரர்களை மதிக்கும் குணம் இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் வீரர்களிடமும் உள்ளது என்பதை காண்பித்து விட்டார்கள்.

வருகின்ற 31ஆம் தேதி அன்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோத உள்ளது. அதில் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. விராட்கோலி , தோனி மற்றும் ரவி சாஸ்திரி மூவரும் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.