இவரை போல் ஒரு வீரர் நிச்சியமாக அனைத்து அணிகளிலும் இருக்க வேண்டும் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய 1 போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் அடுத்த போட்டியில் நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வுலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக மகேந்திர சிங் தோனி நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் இந்திய அணியின் உடையில் தோனி பார்த்ததில் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இதுதான் முதல் உலகக்கோப்பை போட்டி தோனி இல்லாமல் இந்திய அணி விளையாடுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக அவரே செய்தியை வெளியிட்டார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.

ஆனால் அவர் இன்னும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக தலைமை தாங்கி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி, தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து ஐசிசி போட்டிக்கான கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதை போல வேறு எந்த அணியும் கேப்டனும் செய்தது இல்லை. அவ்வப்போது தோனியை பற்றி சில வீரர்கள் அவரவர் கருத்துக்களை சொல்லுவது வழக்கம்;

அதேபோல, இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ரோஹித் சர்மா அளித்த பேட்டியில் ; இப்பொழுது ஒரு போட்டி நடைபெறும் போது குறிப்பிட்ட நம்பர்களை மட்டும் தேர்வு செய்து அணியை அறிவிக்கும். அதில் யாராக இருந்தாலும் ஒரு துணை தேவைப்படும்.

உங்களுக்கு பின்னல் நின்று கொண்டு உங்களுக்கு உதவியாக இருக்க நிச்சியமாக ஒருவர் தேவைப்படும். அதை தோனி சிறப்பாக செய்துள்ளார். அவர் கேப்டனாக இருந்த நேரத்தில் நான் மட்டுமின்றி பல வீரர்கள் அணியில் அறிமுகம் ஆகியுள்ளோம். அவருடன் விளையாடுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.