சிஎஸ்கே அணி இல்லையென்றால் நான் இந்த அணியில் தான் விளையாட ஆசைப்படுகிறேன் ; தீபக் சஹார் ஓபன் டாக் ;

ஐபிஎல் டி-20 2022 போட்டிக்கான மெகா ஏலம் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளது. அதற்கு முக்கியமான காரணம் லக்னோ மற்றும் குஜராத் போன்ற புதிய இரு அணிகள் அறிமுகம் ஆன காரணத்தால் மட்டுமே. அதில் பழைய 8 அணிகளும் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளாமல் என்று பிசிசிஐ கூறியது.

அதில் பல வீரர்கள் எதிர்பார்த்த மாதிரியும், பல விசயங்கள் எதிர்பாராத மாதிரியும் நடந்து முடிந்துள்ளது. இதுவரை 14சீசன் ஐபிஎல் லீக் போட்டிகளில் அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆமாம் , இதுவரை 14 சீசன்களில் 11 முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதுமட்டுமின்றி, இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது சென்னை. இந்த மெகா ஏலத்தில் தீபக் சஹார் 14 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்னை அணியில் இவர் தான் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

தீபக் சஹார் கடந்த இரு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான பவுலராக வளம் வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் விளையாடிய தீபக் சஹார், 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, இப்பொழுதெல்லாம் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக விளையாடி வருகிறார்.

அதனால் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல போராட்டங்களுக்கு பிறகு 14 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற பிறகு பேசிய தீபக் சஹார், நான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

அதுமட்டுமின்றி நான் சென்னை அணியை தவிர்த்து மற்ற அணிகளில் விளையாட விரும்பவில்லை, அதனை பற்றி நான் யோசித்தும் இல்லை. ஏலத்தில் என்னை கைப்பற்றும் போது இது அதிக விலை என்று தான் நான் நினைத்தேன். ஒரு சென்னை வீரராக அணியை உருவாக்க வேண்டும் என்பது தான் எனக்கு முக்கியம்.

ஒருவேளை நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெறவில்லை என்றால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் தீபக் சஹார். 14 கோடி விலை கொடுத்து தீபக் சஹாரை வாங்கியது சரியா ?? தவறா ??

உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!