சிஎஸ்கே அணிக்கு செய்ததெல்லாம் போது…! இனிமேல் இதை தான் நான் செய்ய போகிறேன் ; ஷர்டுல் தாகூர் ஓபன் டாக் ;

0

நேற்று நடந்த இறுதி டி20 போட்டியில் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 184 ரன்களை அடித்தது இந்திய அணி.

அதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 34, ஷ்ரேயாஸ் ஐயர் 25, ரோஹித் சர்மா 7, சூர்யகுமார் யாதவ் 65, வெங்கடேஷ் ஐயர் 35 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான மயர்ஸ் 6, சாய் ஹோப் 8 ரன்களை அடித்துள்ளனர். அதனால் சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை.

இருப்பினும் பூரான், ஷெப்பர்ட் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை அடித்தனர். ஆனால் இறுதிவரை போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களை அடித்தது. அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்றது இந்திய. அதுமட்டுமின்றி, 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தது இந்திய.

போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிந்து கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிறைய செய்விட்டேன். இப்பொழுது இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய பொறுப்பு. இன்னும் சில மாதங்களே உள்ளது உலகக்கோப்பை போட்டிக்கு, அதற்குள் டெத் பவுலிங் செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு மாதிரி பவுலிங் செய்ய வேண்டும். யாக்கர் பவுலிங் அதிகமாக செய்து கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் ஒரே எண்ணம். நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை முன்பே யோசித்து கொண்டு அதன்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் ஷர்டுல் தாகூர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான -டி-20 களமிறங்கிய ஷர்டுல் தாகூர் மொத்தம் நான்கு ஓவர் பவுலிங் செய்தார். அதில் 33 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதில் அதிரடியாக விளையாடிய பூரான் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் ஷர்டுல் தாகூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here