இவரை கேப்டனாக வேண்டாம் என்று நான் தான் சொன்னேன் ; முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் அணி:

சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் நடந்து முடிந்தது. அதில் முதல் இரு போட்டிகளில் தென்னாபிரிக்கா அணியும், அடுத்து இரு போட்டிகளில் இந்திய அணியும் வென்றுள்ளனர். ஐந்தாவது போட்டி வாழ்வா சாவா என்ற நிலையில் இரு அணிகளும் இருந்தனர்.

ஆனால் எதிர்பாராத வகையில் தீடிரென்று மழை பெய்த காரணத்தால் போட்டியை ரத்து செய்தனர். அதுமட்டுமின்றி, இப்பொழுது தான் இந்திய கிரிக்கெட் அணியில் எந்த விதமான சர்ச்சையும் இல்லாமல் விளையாடி வருகின்றனர். ஆமாம், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்திய அணிக்கான கேப்டன் பற்றிய சர்ச்சை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

அதன்பிறகு இப்பொழுது தான் ஒருவழியாக அனைத்து விதமான போட்டிகளுக்கும் ரோஹித் சர்மா கேப்டனாக விளையாடி வருகிறார். இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் பிசிசிஐ தேர்வாளர் சில முக்கியமான கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மதன் லால் கூறுகையில் :

“நிச்சியமாக ரிஷாப் பண்ட் -ஐ கேப்டன் ஆகாமல் இருப்பதை நான் நிறுத்திருப்பேன். நான் அவரை அனுமதிருக்க மாட்டேன். ஏனென்றால் இவரை போன்ற வீரருக்கு இன்னும் சரியான தருணம் இல்லை. அதிலும் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது அவ்வளவு ஒன்றும் சுலபம் இல்லை.”

“அதிலும் அவர் ஒரு இளம் வீரர், இன்னும் நிறைய விஷயங்கள் அவர் (ரிஷாப் பண்ட்) பார்க்க வேண்டியுள்ளது. நிறைய போட்டிகளில் விளையாடினால் தான் அதிக அனுபவம் கிடைக்கும் என்று கூறியுள்ளார் மதன் லால் (முன்னாள் பிசிசிஐ தேர்வாளர்). மேலும் விராட்கோலி மற்றும் தோனி கேப்டன் பற்றி பேசியதில்;

“இன்னும் இரு ஆண்டுகளில் அவரது விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிந்தால் நிச்சியமாக நல்ல கேப்டனாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. தோனி எப்பொழுதும் எந்த தருணத்திலும் அமைதியாகவே இருப்பார், அதனால் அவருக்கு கேப்டன் பதவி சரியாக இருக்கும்.”

“விராட்கோலி ஒரு சிறந்த பேட்ஸ்மேன், அதற்கு நான் ரிஷாப் பண்ட் மோசமான வீரர் என்று சொல்லவில்லை. ஆனால் இன்னும் சில போட்டிகளில் விளையாடி அதிக அனுபவம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் மதன் லால்.

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் கேப்டனாக விளையாடினார் ரிஷாப் பண்ட். அதில் முதல் இரு போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் தோல்வியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணிக்கு ரிஷாப் பண்ட் கேப்டனாக இருந்தால் எப்படி இருக்கும் ?