ரோஹித் சர்மா சொன்ன கருத்திற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வீரர் ; வைரலாக பதிவு ; அப்படி என்ன சொன்னார் ரோஹித் ?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சி ஆட்டம் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விராட்கோலி, ஷமி, சுமன் கில், ரோஹித் சர்மா, பும்ரா போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

கிரிக்கெட் போட்டி என்று வந்தால், ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் புகழ்ந்து பேசுவதும், அவரவர் கருத்துக்களை தெரிவிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல தான் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ; பாகிஸ்தான் பவுலர் முகமத் அமீர் சாதாரணமான பவுலர் தான் என்று கூறினார்.

அதேநேரத்தில் விராட்கோலி மற்றும் இன்னும் சில முக்கியமான உலக கிரிக்கெட் வீரர்கள் முகமத் அமீர் ஒரு சர்வதேச போட்டிகளில் மிகவும் சிறந்த பவுலர் என்று புகழ்ந்து பேசியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரரான முகமத் அமீர் கூறுகையில் ;

“நான் ரோஹித் சர்மா சொன்னதை பெரிதாக நினைத்துக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனி தனி கருத்துகள் இருக்கும். அதனால் அனைவரும் என்னை கிரிக்கெட் உலகில் சிறந்த பவுலர்க என்று சொல்ல முடியாது. இதில் தவறாக ஒன்றும் என்று தெரியவில்லை.”

“( ரோஹித் சர்மா ) அவர் சொன்ன விஷயத்தை நெகட்டிவ் ஆக எடுத்துக்கொள்ள கூடாது. அதுமட்டுமின்றி, நீங்க (ரோஹித்) அனைவர்க்கும் பிடித்த வீரராக இருக்க முடியாது. ஆனால் ரோஹித் சர்மா நிச்சியமாக உலக புகழ்பெற பேட்ஸ்மேன் தான். நான் எப்பொழுது அவருக்கு பவுலிங் செய்தாலும், அவர் அதனை எதிர்கொள்ள தயங்குவார்.”

“இருந்தாலும் அவர் உலக புகழ்பெற்ற பேட்ஸ்மேன் தான் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமத் அமீர். முகமத் அமீர் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2020ஆம் வரை பாகிஸ்தான் அணியில் விளையாடி வந்துள்ளார். இதுவரை, 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 751 ரன்களை அடித்தது மட்டுமின்றி 119 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

அதேபோல, 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 363 ரன்களை அடித்த நிலையில் 81 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அமீர் என்பது குறிப்பிடத்தக்கது.