ஜடேஜா இல்லை ; சென்னை அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் ; அதில் மாற்றமே கிடையாது ; அம்பதி ராயுடு ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக திகழ்கிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதில் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றதால் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 15 ஆண்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தலா ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2023 தொடரிலும் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் லீக் போட்டிக்கான தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாகவும், அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகவும் திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை மொத்தம் ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது சென்னை அணி.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்தே சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி தான் தோனிக்கு இறுதி போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான அம்பதி ராயுடு ஐபிஎல் 2023 கோப்பையை கையில் பெற்றவுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அதனால் சென்னை அணியின் ரசிகர்கள் இடையே சோகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தோனிக்கு பிறகு யார் சென்னை வழிநடத்த போகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

சமீபத்தில் பேட்டி அளித்த சென்னை அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு கூறுகையில் : “எனக்கு தெரிந்து நிச்சியமாக அடுத்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தான். ஆமாம் அவருக்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. தலைவர் பொறுப்புக்கு அவரிடம் (ருதுராஜ்) உள்ளது. இனிவரும் நாட்களில் தோனி மட்டும் ருதுராஜ்-ஐ உருவாக்கினால் நிச்சயமாக கேப்டனாக அணியை வழிநடத்த முடியும் என்று கூறியுள்ளார் அம்பதி ராயுடு.”