இவர் இப்படி விளையாடினால் எப்படி ? இதை தான் WTCபோட்டிகளில் எதிர்பார்க்கிறேன் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

இந்திய vs வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் :

கடந்த ஜூலை 12ஆம் முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற தொடங்கியுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியும், இரண்டாவது போட்டி டிராவில் முடிந்துள்ளது. அதனால் டெஸ்ட் போட்டிக்கான தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளனர்.

இரண்டாவது போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதனால், 128 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 438 ரன்களை அடித்தனர். அதில் அதிகபட்சமாக விராட்கோலி 121, ரோஹித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவீந்திர ஜடேஜா 61, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 ரன்களை அடித்தனர்.

பின்பு வெஸ்ட் இண்டீஸ் விளையாடிய முதல் இன்னிங்ஸ் முடிவில் 255 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 181 ரன்களை அடித்த காரணத்தால் டிக்கிளார் செய்தது இந்திய கிரிக்கெட் அணி. பின்பு மழை பெய்த காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டை கைப்பற்ற முடியாத நிலையில் இந்திய அணி இருந்த காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது.

இதனை அடுத்து வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற இருக்கிறது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

ரோஹித் சர்மா பேட்டி :

போட்டி முடிந்த பிறகு வெற்றியை பற்றி சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா. அதில் “ஒவ்வொரு வெற்றியும் ஒரு புது அனுபவம் தான். நாங்கள் சிறப்பாக தான் விளையாடினாலும், எதிர்பாராத விதமாக இன்றைய போட்டி நடைபெறவில்லை. நான் முகமத் சிராஜ் பவுலிங்-ஐ உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் வருகிறேன்.”

“அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார் சிராஜ். இவரை போலவே மற்ற பவுலர்களும் கையில் பால் இருந்தால் அதிரடி காட்ட வேண்டும். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் விராட்கோலி போன்ற ஒரு வீரர் நிச்சியமாக வேண்டும். அப்பொழுது டெஸ்ட் போட்டியில் சம நிலையில் விளையாட முடியும்.”

“அதுவும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளார் விராட்கோலி. இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி சரியான நிலையில் இருக்கிறது. நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்த பிறகு கூட கூறினேன். நாங்கள் (இந்திய) தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”