தம்பி, இப்படியே ஆடிக்கொண்டிருந்தால்.. விரைவில் வீட்டிற்கு செல்ல வேண்டியதுதான்; இந்திய வீரரை எச்சரித்த ஜாம்பவான் ஆல்ரவுண்டர்!!

0

புஜாராவின் இதே நிலை தொடர்ந்தால், அவரால் இனி அணிக்குள் இடம் பிடிப்பது கடினம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் மதன்லால்.

தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறது. மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஜோடி மயங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அபாரமாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்தது. துரதிஸ்டவசமாக மயங்க் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக துவக்கம் கிடைத்த பிறகு, மூன்றாவது வீரராக உள்ளே வந்த புஜாரா வந்த வேகத்திலேயே முதல் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த போட்டிக்கு முன்பாக புஜாரா மற்றும் ரகானே இருவரின் இடமும் பிளேயிங் லெவனில் கேள்விக்குறியாக இருந்தது. ஏனெனில் நியூசிலாந்து அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகளிலும் புஜாரா மிகவும் மோசமாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானே சொதப்பினார். 

நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இந்தியா ஏ அணியில் தென்னாப்பிரிக்க மைதானத்தில் அபாரமாக விளையாடிய ஹனுமா விஹாரி இருவரும் வெளியில் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இந்த தருணத்தில் மூத்த வீரர் புஜாரா இப்படி சொதப்பி வருவதால், அவருக்கு விரைவில் விளையாடும் 11 வீரர்களின் இடம் கிடைப்பதே கடினம் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் மதன் லால்.

“புஜாரா திணறி வருவது தெளிவாகத் தெரிகிறது. 3-வது இடத்தில் களம் இறங்கும் வீரர் ஒவ்வொரு அணிக்கும் முக்கியமானவர். தொடர்ந்து நிறைய இன்னிங்சில் சொதப்பி வந்தால் அது அணியின் வெற்றியை பாதிக்கும். கேப்டன் குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்புகள் கொடுக்க முடியும். அதற்குள் தனது ஃபார்மை திரும்பக் கொண்டுவர வேண்டும். ஆனால் புஜாராவிற்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்ட பிறகும் அவர் திணறி வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் விரைவில் அவர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படலாம். புஜராவின் இடத்தை நிரப்ப நிறைய வீரர்கள் இருக்கின்றனர். 

அதேபோல் ரகானே மிடில் ஆர்டரில் நன்றாக விளையாடினால், அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். நிறைய நுணுக்கங்களை ரகானே கற்று வைத்துள்ளார். அதனை வீணடிக்காமல் சரியாக பயன்படுத்தி விளையாட வேண்டும்.” என்று அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here