இந்த நிலையில் யாராக இருந்தாலும் நான் துணையாக இருப்பேன் ; சக வீரர்களை ஆதரவிக்கும் வகையில் பேசிய ஹார்டிக் பாண்டிய ;

வருகின்ற 6ஆம் தேதி முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளனர்.

சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட இந்திய அணியின் விவரத்தை அறிவித்தது பிசிசிஐ. அதில் ரவி பிஷோனிக்கு இந்திய அணியில் அறிமுகம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு சிலர் வீரர்கள் மட்டுமே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்திய அணியின் முக்கியமான ஆல் ரவுண்டராக வலம் வந்துள்ளார் ஹார்டிக் பாண்டிய. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் சரியாக விளையாடவில்லை. ஆனால் இந்திய அணியில் அவ்வப்போது வாய்ப்பு கிடைத்தாலும் வெறும் பேட்டிங் மட்டுமே செய்து வருகின்றார்.

அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். இருந்தாலும் இந்த நிலையில் ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் இடம்பெற்றார். அதிலும் பவுலிங் செய்ய முடியாமல் பேட்டிங் மட்டுமே செய்து கொண்டு வந்தார். பின்னர் நான் பவுலிங் செய்யும் வரை என்னை எந்த போட்டியிலும் கைப்பற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.

சமீபத்தில் ஆல் ரவுண்டர் ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் ; ஒரு வீரர் அருமையாக விளையாடும் போது அவர் உச்சத்தில் இருப்பார், அப்பொழுது அவருக்கு எந்த உதவியும் எனக்கு தேவை இல்லை. ஆனால் ஒரு மோசமான நிலையில் இருக்கும்போது அவருக்கு நிச்சியமாக ஒருவர் தேவை படுகிறார்.

என்னை பொறுத்த வரை ஒரு வீரர் அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சூழ்நிலையை ஏற்ப விளையாட வேண்டும். சரியான நேரத்தை பயன்படுத்தி விளையாடி வெற்றி பெற வேண்டும் அதுதான் முக்கியம். போட்டியின் இறுதி வரை விளையாடினால் போட்டியின் வெற்றியாளர் யார் என்பது தெரியும்.

ஆனால் சின்ன சின்ன விஷயங்களால் டி20 போட்டிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும், அது தான் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் 14 மற்றும் 15ஆம் ஓவரில் அதிரடியாக விளையாடி போட்டியில் வெற்றி பெறுவது என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய.

ஐபிஎல் டி20 2022 போட்டியில் புதிதாக இரு அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. அதில் அகமதாபாத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் ஹார்டிக் பாண்டிய. அதனால் ஐபிஎல் போட்டிகளில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.