நான் என்ன தோனியை திருமணம் ஆ ? செய்தேன் சண்டை போடா ; தோனி எந்த தவறும் செய்யவில்லை , இவர்கள் தான் பிரச்சனை ; ஹர்பஜன் சிங் ஓபன் டாக் ;

இந்திய கிரிக்கெட் முக்கியமான கேப்டனாக திகழ்ந்து வந்துள்ளார் மகேந்திர சிங் தோனி. அதிலும் குறிப்பாக தோனி தலைமையிலான இந்திய அணி தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆனால் இன்னும் அவர் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தோனி தலைமையிலான இந்திய அணியில் பல புதிய வீரர்கள் இந்திய அணியில் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி தோனி எப்பொழுதும் அமைதியாக இருப்பதால் எந்த வீரரிடமும் சண்டை போடவே மாட்டார், போட்டிகள் நடக்கும்போதும்.

ஆனால் தோனியை பற்றி அவ்வப்போது சில கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தான் வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் அளித்த பேட்டியில் ; இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனிஏய் பற்றி பேசியுள்ளார்.

அதில் ” அனைவரும் மாற்றி மாற்றி பேசிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நான் ஒன்னு மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். சேவாக், நான், யுவ்ராஜ் , கம்பிர் அனைவரும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தான் ஒன்றாக விளையாடினோம். அதன்பின்னர் நாங்கள் யாரும் விளையாடவில்லை.

2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஒரு சிலர் மட்டுமே விளையாடினார்கள். அதன் காரணம் என்ன ?? எனக்கு தோனியின் மேல் எந்த கோபமும் இல்லை, வருத்தமும் இல்லை. உண்மையை சொல்ல போனாலும் தோனி என்னுடைய சிறந்த நண்பர் தான்.

நான் குறை சொல்ல வேண்டுமென்றால் பிசிசிஐ தான் வேண்டும். அப்பொழுது இருந்து அணியின் தேர்வாளர்கள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்கள் யாரும் வீரர்களை ஒற்றுமையாக இருக்க விடவே இல்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இருப்பாக விளையாடி கொண்டு இருக்கும் நேரத்திலும், புதிய வீரர்களை எதற்கு அறிமுகம் செய்ய வேண்டும் ?

இதனை நான் தேர்வாளர்களிடம் கேட்ட போது அது என் கையில் இல்லை என்று கூறியுள்ளார்கள். பின்னர் அவர்கள் ஏன் தேர்வாளர்களாக இருக்க வேண்டும் ? என்று கோபமாக பேசியுள்ளார். ஹர்பஜன் சிங் 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணியில் 31 டெஸ்ட், 77 ஒருநாள் மற்றும் 25 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் ஹர்பஜன்.