விராட்கோலி கிட்ட எதையுமே பேச முடியவில்லை , பயமாக இருக்கிறது ; ஏ.பி.டிவில்லியர்ஸ் பேட்டி ; முழு விவரம் இதோ ;

கிரிக்கெட் உலகில் போட்டிகளை தாண்டி ஒரு சிலருக்குள் நட்பும் ஏற்பட்டது. அதில் ஒன்று தான் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி மற்றும் முன்னாள் தென்னாபிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ். ஆனால் இவர்கள் இருவரும் ஐபிஎல் டி20 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவரும் இருக்கும் நட்பு , கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. சமீபத்தில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் அளித்த பேட்டியில் ; விராட்கோலியை பற்றி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

விராட்கோலி பற்றி பேசிய அவர் ; நான் எப்பொழுதும் விராட்கோலியிடம் பேச எனக்கு பயமாக இருக்கிறது. அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் எதுமே சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் பேசும்போது விராட்கோலி அணிந்திருந்த ஷூ நன்றாக இருந்தது என்று சொன்னேன்.

அடுத்த நாளே எனக்கு அதேபோல் ஒரு ஷூ வங்கி கொடுத்தார் விராட்கோலி, அதேபோல ஒருநாள் என்னுடைய கைபேசியில் சார்ஜ் இல்லாமல் போய்விட்டது. அதனை தெரிந்த கொண்ட அவர் உடனடியாக புதிய பவர் பேங்க் வங்கி கொடுத்தார். அதுமட்டுமின்றி , எனக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும்,

அதனை தெரிந்த விராட்கோலி அமேசான் இணையதளத்தில் காபி செய்யும் இயந்திரத்தை ஆர்டர் செய்து வங்கி கொடுத்தார் விராட்கோலி என்று கூறியுள்ளார் டிவில்லியர்ஸ். என்னதான் விராட்கோலி கோவப்பட்டலும் அவருக்கு நட்பு இருக்கிறது என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று.

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த ஆண்டு போல் இல்லாமல் இந்த முறை 7 போட்டிகளில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த முறை ஆவது பெங்களூர் அணி கோப்பையை வெல்லுமா இல்லையா என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிக்கு பிறகு விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் கைப்பற்றுமா ? இதுவரை 7 போட்டிகளில் விளையாடிய விராட்கோலி 198 ரன்களையும், டிவில்லியர்ஸ் 207 ரன்களையும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.