நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் ; இந்திய அணியில் இப்படிப்பட்ட ஒரு பவுலரா ? புகழ்ந்து பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வோர்ன் ;

0

பிப்ரவரி 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள். சமீபத்தில் தான் 18 பேர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியையும், டி-20 அணியையும் அறிவித்துள்ளது பிசிசிஐ.

கடந்த தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்விகளை பெற்றுள்ளது இந்திய. அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வோர்ன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதில் ” முகமது சிராஜ் ஒரு மிகச்சிறந்த வீரர். நான் அவருடைய ஆட்டத்தை நீண்ட நாட்களாக கவனித்து கொண்டு தான் வருகிறேன்.

இதையும் படியுங்கள் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆவது இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? ராகுல் டிராவிட் என்ன செய்ய போகிறார் ?? வாய்ப்புக்காக ஏங்கும் இளம் வீரர் இவர் தான் ;

அதுமட்டுமின்றி, அவர் (முகமது சிராஜ்) மட்டும் தான் இதுவரை கடந்த 12 மாதங்களும் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வருவது அவர் மட்டும் தான். அவர் மட்டும் அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக அவருடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்துவார்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவர் ஒரு தீ ஆக விளையாடி வருகிறார் சிராஜ். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன் என்று கூறியுள்ளார் ஷேன் வோர்ன். இந்திய அணியில் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வரும் வீரர்களின் ஒருவர் தான் முகமது சிராஜ். ஒருவேளை புவனேஸ்வர் குமார் அணியில் இல்லாத நேரத்தில் சிராஜ் சிறப்பான மாற்றமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வருகின்ற 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது இந்தியா அணி. அதில் முகமது சிராஜ் ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய இரு போட்டிகளிலும் இடம்பெற்றுள்ளார் சிராஜ். இந்த முறையில் அணியில் 9 பவுலர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், எந்த நான்கு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here