இவர் இந்த மாதிரி விளையாடுவார் என்று சத்தியமாக நான் எதிர்பார்க்கவில்லை ; விராட்கோலி பெருமிதம்

போட்டி 33: அதில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் நபி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார்.

அதனால் முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதனால் இந்திய அணிக்கு அதிகபட்ச ரன்களான 210ஐ கைப்பற்றியது இந்திய அணி.

அதில் கே.எல்.ராகுல் 69, ரோஹித் சர்மா 74, ரிஷாப் பண்ட் 27 மற்றும் ஹார்டிக் பாண்டிய 35 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால் தோல்விதான் மிஞ்சியது. ஏனென்றால் இறுதி ஓவர் வரை போராடி 144 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய. இப்பொழுது இந்திய அணி புள்ளிபட்டியலில் 5வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருந்தாலும் வெற்றியை கைப்பற்றுமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்….!

ஏனென்றால், இன்னும் இந்திய அணி மீதம் இரு போட்டிகள் மட்டுமே உள்ளது…! என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! போட்டி முடிந்த பிறகு விராட்கோலி அளித்த பேட்டியில்; நாங்கள் எப்படி விளையாடுவோம் என்று எங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் டி-20 போட்டிகள் என்பது அதிரடியான போட்டி, பேட்டிங், பவுலிங், அல்லது போட்டியின் இடையில் ஏதாவது மாற்று முடிவுகள் எடுப்பது போன்ற அனைத்தையும் செய்தாக வேண்டும்.

இப்படி விளையாட வேண்டும் என்பது தான் எங்கள் பிளான் ஆனால், அது எதிர்பார்த்த படி சில நேரங்களில் நடப்பதில்லை…! எதிர் அணியின் பவுலிங் உண்மையாலும் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால், எங்கள் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் உண்மையாகவே எங்களை மகிழ்வித்துள்ளார்.

ஏனென்றால் கடந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மிடில் ஓவரில் பந்து வீசி முக்கியமான விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் என்று பெருமையோடு பேசியுள்ளார் விராட்கோலி…!

அப்போ, ஒருவேளை ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இரு போட்டிகளில் இடம்பெற்றிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்குமோ ? என்று பல கேள்விகள் எழுகின்றன. உங்கள் கருத்து என்ன என்பதை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!!