ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆரம்பித்து. இதுவரை 34 போட்டிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் நடந்து வருகிறது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இதுதான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டியில் மிகப்பெரிய மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது என்றே சொல்லலாம். ஏனென்றால் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் வெறும் 3 போட்டியில் மட்டுமே வெற்றியை பெற்றது சிஎஸ்கே. தொடர் தோல்விக்கு தோனி மற்றும் கேதர் ஜாதவ் தான் காரணம் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஏன் கேதர் ஜாதவை ரசிகர்கள் வெறுத்து ஒதுக்கிய காரணம் என்ன ? ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் 6 போட்டிகளில் விளையாடிய கேதர் ஜாதவ் வெறும் 50 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் சிஎஸ்கே அணிக்கு ரன்களை எடுத்து தரவில்லை என்று கூட சொல்லலாம்.
கடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.இந்த போட்டியில் துபாயில் உள்ள ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய சாம் குரான் 0 ரன்களில் ஆட்டம் இழக்க அதன்பின்னர் களம் இறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 179 ரன்களை எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன்பின்னர் களம் இறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் நல்ல ஒரு தொடக்கத்தை வெளிப்படுத்திய தவான் இறுதி வரை போராடி சதம் அடித்துள்ளார். ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
ப்ராவோவுக்கு அடிபட்ட காரணத்தால் இறுதி ஓவர் அவரால் பந்து போடவில்லை. அதனால் வேறு வழி இல்லாமல் ரவீந்திர ஜடேஜாவை அந்த ஓவரை வீச வைத்தார் சிஎஸ்கே அணியின் கேப்டன்.
சென்னை அணியில் ஒருவர் மாற்றம் … யார் தெரியுமா ?… ரசிகர்கள் மகிழ்ச்சி… !
கடந்த போட்டியில் ப்ராவோவுக்கு அடிப்பட்டதால் விளையாட முடியாமல் பாதியில் வெளியேறினர். அவர் ஒரு வெளிநாட்டு வீரர் என்பதால் அந்த இடத்தை நிரப்ப கூடிய ஒரே வீரர் இம்ரான் தாகிர். இவர் கடந்த ஐபிஎல் 2019 போட்டியில் அதிக விக்கெட் எடுத்து பட்டத்தை வேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இம்ரான் தாகிர் இருப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது.