இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு வெற்றி கிடைக்குமா???

0

ஐபிஎல் 2020 டி20 லீக் போட்டிகள் கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் தேதி ஆரம்பித்து. இதுவரை 34 போட்டிகளில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் நடக்க வேண்டிய ஐபிஎல் 2020 இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் நடந்து வருகிறது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி இதுதான்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இல்லாமல் ரசிகர்களும் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 14 போட்டியில் சிஎஸ்கே அணியும் 8 போட்டியில் ராஜஸ்தான் அணியும் வென்றுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 179 ரன்களை எடுத்தது. அதன்பின்னர் களம் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர் தவான் சதம் அடித்து டெல்லி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றுள்ளார்.

புள்ளிப்பட்டியளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டியில் 3 வெற்றி பெற்று 6வது இடத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 9 போட்டிகள் விளையாடி 3 வெற்றி பெற்று 7வது இடத்திலும் உள்ளது.

ஐபிஎல் 2020யில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதிய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here