2018ல் என்னுடைய விளையாட்டு மிகவும் மோசமாக இருந்தது ;ஆனால் அப்பொழுதும் விராட்கோலி என்னை அணியில் இருந்து வெளியேற்றாமல் ஆதரித்தார் ; இந்திய வீரர் பேட்டி ;

கிரிக்கெட் போட்டி என்று வந்தால் போது இந்திய மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது தான் உண்மை. அதுவும் சமீப காலமாக இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் டி-20 லீக் போட்டி தான்.

ஒரு புதிய வீரர் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம் என்பது உறுதி தான். அதில் சந்தேகமில்லை. இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் உள்ளார். இருப்பினும் ஒவ்வொரு போட்டியில் அதிகபட்சமாக 15 அல்லது 17 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒரு சில வீரருக்கு தொடர்ந்து அணியில் வாய்ப்புகள் வழங்கப்படும். அதில் சரியாக விளையாடவிலை என்றால் நிச்சியமாக இந்தியா அணியில் விளையாட முடியுமா என்பது கேள்விக்குறியே…? இதனை பல வீரர் இந்திய அணியில் சந்தித்து வருகின்றனர். இருப்பினும் இந்திய அணியில் சில வீரர்கள் அனைத்து வீரர்களை ஆதரித்து வருவது வழக்கம்.

Indian batsman Rohit Sharma (L) celebrates with team captain Virat Kohli (R) after completing his century (100 runs) during the first one day international (ODI) cricket match between India and West Indies at Barsapara Cricket Stadium in Guwahati on October 21, 2018. (Photo by SAJJAD HUSSAIN / AFP) / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

இதனை பற்றி பேசிய இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “2018ஆம் ஆண்டு என்னுடைய கிரிக்கெட் விளையாட்டு என்பது மிகவும் மோசமான நிலையில் தான் இருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடி வந்தேன்.

அப்பொழுது நான் விளையாடி விளையாட்டிற்கு என்னை அணியில் இருந்து வெளியேற்றிருப்பார்கள். ஆனால் அப்பொழுது விராட்கோலி தான் என்னை ஆதரித்து கொண்டு இருப்பார். அதுமட்டுமின்றி, என்னை மீண்டும் பெங்களூர் அணியில் விளையாட வைத்துள்ளார்…!

நான் இந்த அளவிற்கு விளையாடுவதற்கு விராட்கோலி தான் காரணம். அதனால் எனக்கு வரும் வாழ்த்துக்கள் அனைத்தும் இவருக்கு (விராட்கோலி) தான் சேரும். விராட்கோலி போன்ற கேப்டன் தான் பவுலர்களுக்கு தேவை படுகின்றனர். ஏனென்றால் எப்பொழுதும் மைதானத்தில் அவரது சத்தம் மற்றும் அவர் இருக்கும் சுறுசுறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஒருவேளை வேகப்பந்து வீச்சாளர் சோர்வாக இருந்தால் நிச்சியமாக விராட்கோலி-யை பார்த்தால் போதும் ஒரு வேகம் தோன்றிவிடும் என்று விராட்கோலியை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் வேப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்…………..!

ஐபிஎல் டி-20 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பெங்களூர் அணியின் கேப்டனாக டூப்ளஸிஸ் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி , ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விராட்கோலி மற்றும் டுப்ளஸிஸ் ஆகிய இருவரும் தான் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது…!

அப்போ.. இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்று விடுமோ ?? என்ற கேள்வி எழுகின்றது. ஆனால் இதுவரை மொத்தம் 14 சீசன் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.