சென்னை அணியின் ஆல் ரவுண்டர் முதல் போட்டியில் இல்லை ; சிஎஸ்கே நிர்வாகம் உறுதி

0

ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களே..! தயாராக இருக்கீங்களா ?? இன்னும் 6 நாட்களில் தொடங்க உள்ளது ஐபிஎல் டி-20 2022 போட்டிகள். வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஆமாம்..! அதுவும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். சென்னை அணிக்கு போட்டி வந்துவிட்டால் போதும் ப்ளேயிங் 11ல் யார் யார் இடம் பெற போகிறார்கள் என்ற கேள்விக்கு பஞ்சம் இருக்காது..!

இந்த முறை இரு புதிய அணிகளை அறிமுகம் செய்த பிசிசிஐ, அதனால் மெகா ஏலத்தை சிறப்பாக நடத்தி முடிந்துள்ளது பிசிசிஐ. அதனால் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்து விட்டு மற்ற வீரர்களை ஏலத்தில் இடம்பெறவதாக முன்னே கூறியது பிசிசிஐ.

அதில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி , மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு முக்கியமான வீரர்களை தக்கவைத்தது சென்னை. இதில் ஒருவர் தான் முதல் போட்டியில் விளையாட போவதில்லை என்று சென்னை அணியின் நிர்வாகம் கூறியுள்ளது.

அதில் ” வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய வீரர்கள் வந்துவிட்டனர். ஆனால் மொயின் அலி மட்டும் இன்னும் இங்கிலாந்து நாட்டில் இருந்து கிளம்பவில்லை. அதற்கு விசா பிரச்சனை தான் காரணம். எங்கள் தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களும் சரியாக தான் செய்துள்ளோம்.

ஆனால் விசா பக்கத்தில் தான் ஏதோ பிரச்சனை உள்ளது. ஆனால் அதனை கூடிய விரைவில் சரி செய்துவிடுவார்கள். மொயின் அலி இந்திய வந்த உடன் மூன்று நாட்கள் நிச்சியமாக தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின்னர் தான் பயிற்சியை மேற்கொள்ளவும் முடியும் அணியில் விளையாடவும் முடியும் என்று கூறியுள்ளார் சென்னை அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன்.

கடந்த ஆண்டு சென்னை அணியில் மொயின் அலியின் ஆட்டம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி ரன்களை அடிப்பது மட்டுமின்றி சரியான நேரத்தில் பவுலிங் செய்து விக்கெட்டையும் கைப்பற்றி கொண்டு வருகிறார் மொயின் அலி..!

இப்பொழுது மொயின் அலி-க்கு பதிலாக எந்த வெளிநாட்டு வீரர் ப்ளேயிங் 11ல் இடம்பெற போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது..! என்ன செய்ய போகிறார் மகேந்திர சிங் தோனி. முதல் சில போட்டிகள் மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் தொடக்கத்தில் இருந்து தோல்வியை பெற்றால் பின்னர் வெற்றியை கைப்பற்றுவது சுலபமாக இருக்காது..! என்பதே உண்மை.

சென்னை ரசிகர்களே நீங்க சொல்லுங்க..! மொயின் அலி-க்கு பதிலாக அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதை மறக்காமல் கீழே உள்ள Comments பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here