CSK அணியில் இவர் நிச்சியமாக சிறப்பாக விளையாட போகிறார் ; அதில் மாற்றம் இல்லை ; முன்னாள் வீரர் உறுதி ;

ஐபிஎல் 2022: ஐபிஎல் 2022 போட்டிகள் கடந்த 26ஆம் தேதி முதல் தொடங்கி இதுவரை வெற்றிகரமாக 13 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை 10 அணிகள் என்பதால் விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது…!

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அணியில் எப்படி மோசமான நிலையில் இருந்ததோ, அதேபோல தான் இந்த ஆண்டு மிகவும் மோசமான நிலையில் உள்ளது ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை மொத்தம் 3 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி மூன்று போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது.

சென்னை அணியின் தோல்விக்கு என்ன காரணம் ?

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் 131 ரன்களை மட்டுமே அடித்தார். பின்னர் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 210 ரன்களை அடித்தும் பவுலிங் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் தோல்வியை பெற்றது சென்னை.

பின்பு சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் சரியாக இருந்த நிலையில் பேட்டிங் மிகவும் மோசமான நிலையிக்கு தள்ளப்பட்டது. அதில் மொயின் அலி, ருதுராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேசிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்துள்ளனர்.

இதனை பற்றி பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ; சென்னை அணிக்கு வீக்னெஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருதுராஜ் தான் என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர் ” ருதுராஜ் விளையாடிய பல போட்டிகளை நான் பார்த்துள்ளேன்.”

“எப்பொழுதும் அவர் தொடக்கத்தில் சில போட்டிகளில் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதுமட்டுமின்றி மும்பையில் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதகமாக மாறியுள்ளது. ஸ்விங் அதிகம் நடப்பதால் துபாய் போல இங்கு விளையாட முடியாது. அதனால் ருதுராஜ் சரியாக பந்தை பார்த்து விளையாட வேண்டும்.”

“ருதுராஜ் கெய்க்வாட் திறமையான வீரர் தான், இருப்பினும் அவருக்கான சரியான தருணத்தை அவர் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார் வாசின் ஜாபர்.” இந்த ஆண்டு ஐபிஎல் 2022யில் விளையாடிய ருதுராஜ் 0,1,1, ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய ரன்களை குவித்தார். அவரது அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணி பல போட்டிகளில் வெல்ல காரணமாக இருந்துள்ளது என்பது தான் உண்மை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் என்ன செய்ய போகிறார் ருதுராஜ் ?

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!