இறுதி நேரத்தில் சென்னை அணியில் இருந்து நான் வெளியே போய்விடும் ; வேறு வழியில்லை ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இரு போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி தொடங்க இருப்பதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக இருக்கிறது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். ஆமாம், வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று முதல் போட்டி தொடங்க இருக்கிறது.

அதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். இதற்கிடையில் சென்னை அணிக்கு ஒரு ஆபத்தான நிலை உருவாகியுள்ளது.

சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் :

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 16.25 கோடி விலை கொடுத்து இங்கிலாந்து அணியின் ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியுள்ளனர்.

அதனால் அவரது பங்களிப்பு சென்னை அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என்று பலர் நம்பிக்கொண்டு வந்தனர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி சென்னை அணிக்கு ஆபத்தாக மாறியுள்ளது.

ஆமாம் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி ஜூன் 1ஆம் தேதி ஆண்டு தொடங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அஷிஸ் போட்டியும் நடைபெற இருப்பதால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு சென்னை அணி தேர்வானாலும் பென் ஸ்டோக்ஸ்- இடம்பெற மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் போட்டியை விட அவரது அணிக்காக விளையாடுவதை முன்னுரிமை காட்டி வருகிறார் பென் ஸ்டோக்ஸ் என்பது தான் உண்மை. 16.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ் ப்ளே-ஆஃப் போன்ற முக்கியமான சுற்றில் இடம்பெறவில்லை என்றால் சென்னை அணிக்கு நிச்சியமாக பின்னடைவு தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

கிரிக்கெட் ரசிகர்களுக்கான கேள்வி :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை என்றால் மாற்று வீரராக யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை என்ன என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here