சிஎஸ்கே வீரரை கொக்கி போட்டு தூக்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி ; கோப்பையை வென்றுவிடுமோ ?

0

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது ஐபிஎல் 2022 போட்டி. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் போட்டி. பின்னர் கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை மொத்தம் 14ஆம் ஆண்டுகள் நடந்து முடிந்துள்ளது பிசிசிஐ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான வாட்சன் பற்றி சொல்லவேண்டியதே இல்லை. ஏனென்றால், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

ஐபிஎல் 2019ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டி வரை விளையாடிய கோப்பையை வெல்லவில்லை. ஆனால் அந்த போட்டியில் வாட்சன் இறுதிவரை விளையாடி ரன்களை அடித்தார், அதுமட்டுமின்றி அவரது காலில் ரத்தம் வரும் அளவிற்கு விளையாடினார் வாட்சன்.

அதன்பின்னர் வாட்சன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். ஆனால் இப்பொழுது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் துணை பயிற்சியளரான நியமனம் செய்துள்ளது டெல்லி அணி. அதனால் சென்னை ரசிகர்கள் வாட்சன் மீண்டும் ஐபிஎல் போட்டியில் வருகிறார் என்பதால் சந்தோசமாக உள்ளனர்.

கடந்த இரு ஆண்டுகளில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் ரிஷாப் பண்ட் சிறப்பாக டெல்லி அணியை வழிநடத்தி வருகிறார். அதனால் வாட்சன் பயிற்சியாளராக இருப்பதால் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2020ஆம் ஆண்டு இறுதி போட்டி வரை முன்னேறியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்த முறையும் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வலுவாக இருப்பதால் நிச்சயமாக இறுதி போட்டி வரை டெல்லி கேபிட்டல்ஸ் அணி முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here