பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான போட்டியில் இந்த அணி தான் வெல்ல போகிறது ; புள்ளி விவரம் இதோ ;

நாளை இரவு நடைபெற உள்ளது இரு நாட்டுக்கு இடையேயான கிரிக்கெட் போர். எப்படி வெற்றி பெற வேண்டும் என்று இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடந்த போட்டியில் யார் யார் எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை பற்றி ஓர் புள்ளி விவரம்;

இதுவரை பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் 132 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் இந்திய அணி 55 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 73 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளது. ஆனால் ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி மாஸ் காட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

ஏனென்றால் இதுவரை உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 7 போட்டிகளிலும் இந்திய அணி தான் வெற்றியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இவ்விரு அணிகளும் 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் நான்கு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மீதமுள்ள ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இருந்தாலும் இந்திய அணியிடம் வலுவான வீரர்கள் நிறைய வீரர்கள் இருந்தாலும் பாகிஸ்தான் அணி எப்படி விளையாடும் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால், சமீப காலமாக உலகக்கோப்பை போட்டிகளில் மட்டுமே இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும்மோதி கொண்டு வருகின்றனர்.

ஐசிசி உலகக்கோப்பையை கைப்பற்றுமோ ..!! இல்லையோ..! எப்படியாவது பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நிச்சியமாக வெற்றி பெற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், மகேந்திர சிங் தோனி ஆலோசகராக இருக்கும் இந்த ஆண்டு பாகிஸ்தான் அணியை வென்று இந்தியாவின் பெருமையை தக்க வைத்துக்கொள்ளுமா ? உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!!!!