பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இவங்க 11 பேர் தான் விளையாட வாய்ப்பு அதிகம் உள்ளது ; உத்தேச பட்டியல் விவரம் இதோ ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் உலகக்கோப்பை போட்டி நாளை நடைபெற உள்ளது. அதில் பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் மோத உள்ளனர்.

இந்த போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. அதனால் கோடிக்கான ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

இதுவரை இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடியுள்ளது இந்திய அணி. அதில் இருந்து போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 யார் யாராக இருக்கும் என்று பல எதிர்பார்ப்புகள் எழுகின்றன.

உத்தேச இந்திய அணியின் ப்ளேயிங் 11

ஓப்பனிங் பேட்ஸ்மேன் : கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அதுமட்டுமின்றி, பல போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவர்கள் இருவருக்கும் உண்டு. அதனால் சிறப்பான தொடக்க ஆட்டம் அமைய வாய்ப்பு உள்ளது.

மிடில் ஆர்டர்: இஷான் கிஷான், விராட்கோலி, ரிஷாப் பண்ட் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதனால் இதில் ஏதாவது ஒருவர் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் சரியாக ரன்களை அடித்து அதனை சரி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ஆல் – ரவுண்டர் : ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றன. இதில் ஹார்டிக் பாண்டிய சமீப காலமாக பவுலிங் செய்வதில்லை. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் பவுலிங் செய்துள்ளார். ஆனால் உலகக்கோப்பை போட்டியில் பவுலிங் செய்வாரா ?? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

பவுலர்கள்: புவனேஸ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற முன்னனி வீரர்கள் இடம்பெற அதிகம் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை டி-20 2021 போட்டியில் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனி ஆலோசகராக நியமனம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் நிச்சியமாக இந்தமுறை இந்திய அணி தான் கோப்பையை வெல்ல போகிறது என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

உங்களுக்கு பிடித்த ப்ளேயிங் 11 – ஐ மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!