ரோஹித் சர்மா இந்திய அணியை வழிநடத்த இந்த ஒரு காரணம் போதும்..! கவுதம் கம்பிர் ஓபன் டாக் ;

கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும்படி செய்துள்ளது பிசிசிஐ. ஏனென்றால் ஒரு நாள் போட்டிக்கான கேப்டனாக இருந்த விராட்கோலி-யை வெளியேற்றிவிட்டு ரோஹித் சர்மாவை கேப்டனாக மாற்றியுள்ளது பிசிசிஐ . அதனால் விராட்கோலி ரசிகர்களுக்கு மிகப்பெரிய குழப்பம்ஏற்பட்டுள்ளது.

பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்துக்களை விராட்கோலிக்கு ஆதரவு தரும் விதமாக வெளியிட்டு வருகின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், சமீபத்தில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டிகளுக்கு முன்பே நான் டி-20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளேன் என்று அறிவித்துவிட்டார்.

பின்னர் அவர் எதிர்பார்த்த படி டி-20 உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதி கூட போகாமல் வெளியேறியது இந்திய அணி. பின்னர் டி-20 கேப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் விராட்கோலி. அதன்பின்னர் இப்பொழுது ரோஹித் சர்மா சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளுக்கு எதிராக விளையாடிய இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய ரோஹித் சர்மா மூன்று போட்டிகளும் வென்று 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

பின்னர் பிசிசிஐ, எடுத்த அதிரடி முடிவால் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலியை வெளியேற்றி அந்த பொறுப்பை மீண்டும் ரோஹித் சர்மா கையில் ஒப்படைத்துள்ளனர். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை பற்றி பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரர் கவுதம் கம்பிர் கூறுகையில் ; இதுவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளது. அதுமட்டுமின்றி, மற்ற கேப்டன்கள் போல் இல்லாமல், மிகவும் அமைதியாக இருப்பார்.

சகா வீரர்களை வற்புறுத்தி எந்த ஒரு செயலையும் செய்ய விடமாட்டார். அதனால் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக நிறைய விஷயங்களை செய்ய உள்ளது. இப்பொழுது தான் இந்திய அணி ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பது போல நான் உணர்கிறேன் என்ட்ரி கூறியுள்ளார் கம்பிர்.

இப்பொழுது ரோஹித் சர்மா தான் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான கேப்டன் …! பிசிசிஐ சரியான முடிவை தான் எடுத்துள்ளதா ?/ இல்லையா ?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!