இரு மாற்றங்களுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட போகின்ற உத்தேச அணி இதுதான் ; முழு விவரம் இதோ ;

முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் வெற்றி பெற திவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 296 ரன்களை விழாசியுள்ளார். அதில் பவுமா மற்றும் டூஸ்ஸன் ஆகிய இருவரும் சதம் அடித்துள்ளனர். பின்னர் 297 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. இறுதி வரை போராடி 265 ரன்கள் மட்டுமே கைப்பற்றியது இந்திய.

அதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது தென்னாபிரிக்கா அணி. இந்திய அணி சமீபத்தில் தான் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் தோல்வியை பெற்றது. அதனால் ஒருநாள் போட்டிக்கான தொடரில் மிதமுள்ள இரு போட்டிகளில் வெற்றி பெற திவிரமான பயிற்சி செய்து வருகிறது இந்திய.

நாளை நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் நிச்சியாமாக இரு மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆமாம்…!!! நேற்றைய முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், போன்ற மூன்று வீரர்களும் சொல்லும் அளவுக்கு பேட்டிங் செய்யவே இல்லை.

ஆமாம் ரிஷாப் பண்ட் 16, ஷ்ரேயாஸ் ஐயர் 17, மற்றும் வெங்கடேஷ் ஐயர் 2 ரன்களை மட்டுமே தான் அடித்தனர். அதனால் தான் இந்திய அணி தோல்வியை பெற்றது. இதில் ரிஷாப் பண்ட்- ஐ அணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்பு மிகவும் குறைவு தான். அதனால் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றால் சிறப்பாக அணியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றால் வலுவான இந்திய அணியாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதனை செய்வாரா ? இந்திய அணியின் புதிய கேப்டனான கே.எல்.ராகுல் ?? கிரிக்கெட் ரசிகர்களே நீங்க சொல்லுங்க..!! அணியில் யார் யார் மாற்ற வேண்டும் .. உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க….!!!