ஓ.. ஓ… இதனால் தான் வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் தவறவில்லையா… ! ; முழு விவரம் இதோ ;

0

நேற்று முதல் ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

அதில் இந்திய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாபிரிக்கா அணி. அதுமட்டுமின்றி முதல் போட்டியில் இளம் வீரரான வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. வெங்கடேஷ் ஐயர் ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டர் .

முதல் ஒருநாள் ஏன் வெங்கடேஷ் ஐயர் பவுலிங் செய்யவில்லை என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஷிகர் தவான் அதனை பற்றி கூறியுள்ளார். இந்திய அணியில் முன்பே சுழல் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பவுலிங் செய்து கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் நாங்கள் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தவே இல்லை.

அதுமட்டுமின்றி வெங்கடேஷ் ஐயரை பவுலிங் செய்வதற்க்காக அணியில் வைத்திருக்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும். ஒவ்வொரு தனித்தனி போட்டியும் முக்கியமான ஒன்று தான் என்று கூறியுள்ளார் ஷிகர் தவான். நேற்று நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் 84 பந்தில் 79 ரன்களை அடித்துள்ளார். இந்திய அணியில் அதிக ரன்களை அடித்த ஒரே வீரர் தவான்.

அதனால் இரண்டாவது போட்டியில் நிச்சியமாக ஷிகர் தவான் விளையாடுவார்..! இப்பொழுது 1- 0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளதால், அடுத்த வரும் இரு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். இல்லையென்றால் டெஸ்ட் போட்டியை போல தான். கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிக்கான தொடர் வெற்றியை கைப்பற்றுமா ? இல்லையா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here