WTC 2021 ;உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை நிச்சியமாக இந்தியாவுக்கு தான்; அதனை உறுதி செய்த நான்கு காரணங்கள்;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதனால் தேர்வு செய்த இந்தியா அணியின் வீரர்கள் அனைவரும், ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு செல்ல போவதாக தகவல் வெளியானது. ஏனென்றால் அப்பொழுதுதான் 7 அல்லது 10 நாட்கள் அனைத்து வீரர்களும் தனிமையில் இருப்பார்கள்.

பின்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி அளிப்படுவார்கள். அதனால் தான் சில நாட்கள் முன்பே இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

இந்திய அணி வெற்றி பெற்றால் முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பையை வென்ற பெருமை இந்திய அணிக்கு இருக்கும். அதிலும் ஒரு சில காரணங்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. அதில் முதலில் ;

விளையாடும் மைதானம் :

இந்திய அணியின் வீரரான விராட் கோலி மற்றும் ரஹானே சிறப்பான டெஸ்ட் பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளனர். அதில் ரஹானே இறுதியாக சவுத்அம்ப்டன் மைதானத்தில் விளையாடிய 4 இன்னிங்ஸ் போட்டியில் 168 ரன்களை அடித்துள்ளார். அதில் இரு அரைசதம் அடித்துள்ளார்.

அதேபோல விராட் கோலி, தான் இந்திய அணியில் அதிக ரன்களை அடித்த வீரர்களுள் ஒருவர். இதே மைதானத்தில் அதிகபட்சமாக 171 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் ஆர்டர் :

தேர்வு செய்த இந்திய அணி மிகவும் வலுவான அணி என்பதில் சந்தேகமில்லை. அதில் ஆல் -ரவுண்டராக உள்ள ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திர அஸ்வின், அக்சர் பட்டேல் போன்ற வீரர்கள் உள்ளனர். ஒருவேளை பேட்ஸ்மேன் சொதப்பினாலும் இவர்கள் அதனை சமாளித்து விடுவார்கள்.

ஏனென்றால் இறுதியாக சில போட்டிகளில் ஜடேஜாவின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேல் மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகிய இருவரின் ஆட்டம் ரசிகர்கள் கவர்ந்துள்ளது.

பவுலர்கள்:

இந்தியா அணியின் பவுலரான முகம்மது ஷாமி , இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகிய மொன்று வீரர்களும் இந்திய அணிக்குமிகவும் முக்கியமான பவுலர்கள். இவர்கள் நிச்சியமாக சரியான நேரத்தில் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள்.

ஒருவேளை இவர்களுள் யாராவது சொதப்பினால், அந்த இடத்தை நிச்சியமாக தாகூர் மற்றும் முகமது சிராஜ் அதனை பூர்த்தி செய்வார்கள். அதிலும் தாகூர், ஆஸ்திரேலியாவுக்கு எடிதிரான போட்டியில் பவுலிங் மட்டுமின்றி பேட்டிங் செய்தும் அசத்தியுள்ளார்.

சமீபத்திய வெற்றி :

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. அதில் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று விராட் கோலி இல்லை, அதற்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருந்து வெற்றியை கைப்பற்ற உதவி செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போட்டியில் வென்று இப்பொழுது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதனால் நிச்சயமாக இந்திய அணிக்கு கோப்பையை வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளது.

இந்திய அணி வெற்றி பெறுமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.