அப்பாடா …! ஒருவழியாக ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் விக்கெட்டை கைப்பற்றி பெருமூச்சு விட்ட இந்திய ;

0

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநால் போட்டிகள் தொடங்கியுள்ளது.

இதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை.

தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 5 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மிச்சேல் மார்ஷ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து ரன்களை சரமாரியாக குவித்தனர்.

இதில் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆபத்து காத்திருந்தது. ஏனென்றால், தொடக்க வீரரான மிச்சேல் மார்ஷ் அதிரடியாக விளையாடி தொடர்ந்து ரன்களை குவித்தார்.

இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. ஏனென்றால் அரைசதம் அடித்த நிலையில் மேலும் அதிரடியாக விளையாடி ரன்களை விளாசினார். பின்பு 19வது ஓவரில் ர்வைன்ற ஜடேஜா வீசிய பந்தை எதிர்கொண்டார் மிச்சேல் மார்ஷ்.

அப்பொழுது எதிர்பாராத வகையில் எட்ஜ்-ல் பட்டு சிராஜ் கைக்கு சென்றது. அதனால் 65 பந்தில் 81 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டையும் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

22 ஓவர் முடிந்த நிலையில் 3 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 138 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 5, மிச்சேல் மார்ஷ் 81, ஸ்டீவன் ஸ்மித் 22, மரன்ஸ் லபுஸ்ச்சங்னே 15*, ஜோஷ் இங்கிலீஸ் 5* ரன்களை அடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here