சும்மா சொல்ல கூடாது ; பவுலிங் என்றால் இப்படி இருக்கணும் ; இலங்கை அணியை அலறவிட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ;

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கிறது.

முதல் டி-20 போட்டியின் விவரம் :

நேற்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்கியது இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டி. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கி டார்கெட் செட் செய்ய களமிறங்கியது இந்திய. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 162 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 37, ஹர்டிக் பாண்டிய 29, தீபக் ஹூடா 41*, அக்சர் பட்டேல் 31* ரன்களை அடித்துள்ளனர்.

சற்றுமுன் : நல்ல வேளை ; இவருடைய பவுலிங் இந்திய அணிக்கு சாதகமாக மாறியது; இனிமேல் இவர் இந்திய அணியில் விளையாடுவார் ; ஹர்டிக் பாண்டிய பேட்டி ;

பின்பு 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்த காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர். ஆனால் கேப்டனான ஷனாக அதிரடியாக விளையாடி ரன்களை அடிக்க தொடங்கினார். இறுதி ஓவர் வரை போராடிய இலங்கை அணி 160 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய. இந்த போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனவர் பவுலர் ஷிவம் மாவி. 4 ஓவர் பவுலிங் செய்த ஷிவம் மாவி 22 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். ஷிவம் மாவின் அசத்தலான பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது தான் உண்மை.

மூத்த வீரர்களை காட்டிலும் இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சரியாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்து என்ன ?