இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி அன்று தொடங்கிய போட்டி இன்றுடன் நிறைவடைய உள்ளது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 167.2 ஓவர் முடிவில் 480 ரன்களை அடித்தனர்.
அதில் அதிகபட்சமாக கவாஜா 180, க்ரீன் 114, ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்களை அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி ரன்களை குவித்தனர்.
அதிலும் விராட்கோலி186 ரன்களையும், சுப்மன் கில் 128 ரன்களையும் அடித்து தொம்சம் செய்துள்ளனர். அதனால் 178.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த இந்திய அணி 571 ரன்களை அடித்தனர்.
பின்பு பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 54 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை இழந்த அந்நிலையில் 130 ரன்களை அடித்துள்ளனர். அதனால் இந்த போட்டி நிச்சியமாக ட்ராவில் தான் முடிய போகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான வாய்ப்பு :
நான்காவது டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ஆஸ்திரேலியா அணியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றிருந்தால் நிச்சியமாக நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறியிருக்கும்.
ஆனால் எதிர்பாராத விதமான போட்டி ட்ராவில் முடிவடைய போகிறது. அப்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லையா ?
மூன்றாவது இடத்தில் இலங்கை அணியும் நியூஸிலாந்து அணியும் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். ஒருவேளை இலங்கை அணி இரு டெஸ்ட் போட்டிக்கான தொடரிலும் வெற்றி பெற்றிருந்தால் நிச்சியமாக இறுதி போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது.
ஆனால் நியூஸிலாந்து அணி இறுதிவரை போராடி இலங்கை அணியை முதல் டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளனர். அதனால் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளனர்.
அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அதுமட்டுமின்றி, இதுவே இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் முறை நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய குறிப்பிடத்தக்கது.