நான் இதை ஒப்புக்கொள்கிறேன் ; இந்த தவறால் தான் நாங்கள் தோல்விப்பெற்றோம் ; ஸ்மிருதி மந்தன ஓபன் டாக் ;

0

WPL : இந்த ஆண்டு முதல் தொடங்கியுள்ளது பெண்களுக்கான டி-20 லீக் போட்டிகள். இதில் மொத்தம் 5 அணிகளை கொண்டு விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

எப்படி ஆண்கள் அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆண்டுதோறும் மோசமான நிலையில் விளையாடி வருகிறார்களோ, அதேபோல தான் இந்த ஆண்டு அறிமுகம் ஆகியுள்ள பெண்களுக்கான டி-20 போட்டியில் பெங்களூர் அணி (பெண்கள்) மோசமான நிலையில் உள்ளனர்.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய பெங்களூர் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி பெற்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம் :

இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்மிருதி மந்தன தலைமையிலான பெங்களூர் அணியும், மெக் லென்னிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை. முதல் 10 வரை நிதானமாகவே விளையாடி வந்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் விளையாடிய எல்லிஸ் பெர்ரி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 150 ரன்களை அடித்தனர். அதில் பெர்ரி 67, தேவின் 21, ரிச்சா குஹோஷ் 37 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.

டெல்லி அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த படி அமையாவிட்டாலும் அனைத்து வீரர்களை சூழ்நிலைக்கு ஏற்ப ரன்களை அடித்து விக்கெட்டை இழந்தனர். அதனால் இறுதி ஓவர் வரை போராடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 154 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வென்றுள்ளது டெல்லி.

தொடர்ந்து ஐந்து போட்டிகளிலும் தோல்வி பெற்றுள்ளது பெங்களூர் அணி. போட்டி முடிந்த பிறகு தோல்விக்கான காரணத்தை பற்றி கேப்டன் ஸ்மிருதி மந்தன பேசியுள்ளார். அதில் “உண்மையிலும் எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக விளையாடி உள்ளனர். உண்மையை சொல்ல போனால் எங்கள் அணியில் (பெங்களூர்) நாளுக்கு நாள் முன்னேற்றம் தான்.”

“இருந்தாலும் மரிசனனே காப் மற்றும் ஜெஸ் ஜோன்ஸஸ்ன் இவருடைய பார்ட்னெர்ஷிப் தான் தடுக்கவே முடியாமல் போய்விட்டது. அதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையே. டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வீரர்கள் அவர்களுது அனுபவத்தை பயன்படுத்தி வென்றுள்ளனர்.”

“ஆனால் நாங்கள் தொடங்கிய விதம் மற்றுமின்றி என்னுடைய பேட்டிங்-ம் சரியில்லை.முதல் 14 ஓவர்கள் தான் மோசமான பேட்டிங் அமைந்தது. ஒருவேளை இன்னும் 10 அல்லது 15 ரன்கள் கிடைத்திருந்தால் ஆட்டம் வேறு விதமாக மாறியிருக்கும் என்று கூறியுள்ளார் ஸ்மிருதி மந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here