ஐயோ..! இந்திய அணியின் தொடக்க வீரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி : உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நேற்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. அதில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து அணி.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற 8ஆம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் தொடங்க உள்ளது. இந்த போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் இந்த முறை இந்தியாவில் நடைபெறுவதால் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்று அனைத்து முயற்சியையும் கையில் எடுத்துள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு :

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கி ஒருநாள் முடிந்த நிலையிலும், இந்திய கிரிக்கெட் அணி ஒரு போட்டியில் கூட விளையாட நிலையில் ஒரு வீரருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியுள்ளதால் இந்திய கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆமாம், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடிய பல போட்டிகளில் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

அப்படி இருக்கும் நிலையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உறுதியான முதல் சில போட்டிகளில் சுப்மன் கில் நிச்சியமாக விளையாட வாய்ப்புகள் இல்லை. அதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. என்ன செய்ய போகிறது இந்திய ?

இந்திய அணியின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்டிக் பாண்டிய (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஷர்டுல் தாகூர், ஜஸ்பிரிட் பும்ரா, முகமத் சிராஜ், குல்தீப் யாதவ், சூரியகுமார் யாதவ், இஷான் கிஷான், ரவிச்சந்திர அஸ்வின், முகமத் ஷமி.

சுப்மன் கில்-க்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்…!