தமிழக வீரர் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் இடம்பெற வேண்டும் ; முன்னாள் வீரர்கள் உறுதி : ஆனால் வாய்ப்பு கிடைக்குமா ?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் நேற்று முதல் நடைபெற தொடங்கியது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி நடைபெற்று முடிந்தது. அதில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின.

இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது நியூஸிலாந்து அணி. அதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற 8ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் எந்த எந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. ஒரு போட்டி ஆரம்பித்தால் அதனை பற்றி முன்னாள் வீரர்கள் பேசுவது வழக்கம் தான்.

இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ?

தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் விளையாடி பல சாதனைகளை செய்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் செய்து ரன்களையும் விளாசியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா ? இல்லையா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் இருக்கும் நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா ? இதனை பற்றி முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் மற்றும் கவாஸ்கர் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். கவாஸ்கர் ” எனக்கு தெரிந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் (முகமத் சிராஜ், முகமத் ஷமி மற்றும் பும்ரா) போன்ற வீரர்கள் இடம்பெறலாம். அப்படி இல்லையென்றால் இரு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துகொள்ளலாம். ஏனென்றால், ஹர்டிக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.”

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் “முதல் 7 வீரர்களை பற்றி கவலை இல்லை. இருப்பினும் இந்திய அணிக்கு நிச்சியமாக 5 பவுலர்கள் தேவைப்படுகின்றனர், அதுமட்டுமின்றி ஆறாவதாக ஹர்டிக் பாண்டிய பவுலிங் செய்யலாம்.”

“அப்படி இல்லையென்றால் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துவிட்டு, குல்தீப் அல்லது அஸ்வின் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.”