என்ன இப்படி விளையாடுறாங்க… ! இந்திய அணியை பற்றி பேசிய ஸ்டீவ் ஸ்மித் ; முழு விவரம் இதோ ;

ICC WorldCup 2021: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 17ஆம் தேதி அன்று தொடங்கியது. ஆனால் இந்திய அணிக்கு வருகின்ற 24ஆம் தேதி தான் முதல் போட்டி நடைபெற உள்ளது. அதுவும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று மதியம் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 152 ரன்களை அடித்தனர்.

பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி கிட்டத்தட்ட 99 ரன்களை அடித்தனர். அதனால் 17.5 ஓவர் முடிவில் 153 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

போட்டி முடிந்த பிறகு ஆஸ்திரேலியா வீரர் ஸ்டீவ் ஸ்மித் அளித்த பேட்டியில் ; இந்திய அணியை வீழ்த்துவது நிச்சியமாக கடினமாக தான் இருக்க போகிறது. ஏனென்றால் அவர்கள் அனைத்து பக்கத்திலும் வலுவாக இருக்கிறார்கள். ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப், மிடில் ஆர்டர் மற்றும் பவுலிங் போன்ற அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, கடந்த இரு மாதங்கள் அவர்கள் இங்கு தான் டி-20 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்தனர். அதனால் அவர்களுக்கு சூழ்நிலை புரிந்து கொண்டு விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை என்று ஸ்டீவ் ஸ்மித் இந்தியா அணியை புகழ்ந்து பேசியுள்ளார்.

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிமுகம் செய்தது பிசிசிஐ. அதில் விராட்கோலி, ரிஷாப் பண்ட், பும்ரா, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஷர்டுல் தாகூர், வருண் சக்ரவத்தி , ராகுல் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இந்த முறை டி-20 உலகக்கோப்பை 2021 -யில் இந்திய அணிக்கு மகேந்திர சிங் தோனியை ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இந்தமுறை உலகக்கோப்பையை வெல்லுமா இல்லையா என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும் ……!!!!