வீடியோ ; தோனி..! அவருடைய வேலையை ஆரம்பித்துவிட்டார் ..! தல தலதான்…! வைரலாகும் பதிவு….!!

ICC WorldCup 2021 : உலகக்கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, இந்திய அணிக்கு முதல் போட்டியே வருகின்ற 24ஆம் தேதி தான். அதுவும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து, வெற்றி பெறுமா ?? இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!

சமீபத்தில் தான் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டடுள்ளது. விராட்கோலி, ரோஹித் சர்மா, இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார், பும்ரா போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, மகேந்திர சிங் தோனி தான் இந்த ஆண்டு உலகக்கோப்பை 2021 போட்டியில் இந்திய அணிக்கு ஆலோசகராக அறிவித்துள்ளது பிசிசிஐ. அதனால் மீண்டும் தோனியை இந்திய அணியின் உடையில் காண ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது இந்திய அணி. அதில் வென்ற ஆஸ்திரேலியா அணி 152 ரன்களை அடித்தனர். பின்பு 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் 17.5 ஓவர் முடிவில் 153 ரன்களை அடித்து வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியின் போது மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் மைதானத்தில் பயிற்சி செய்து வந்தார்கள். அதில் ரிஷாப் பண்ட் -க்கு விக்கெட் கீப்பிங் எப்படி செய்ய வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி பயிற்சி கொடுக்கும் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

வீடியோ :

மகேந்திர சிங் தோனி கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச போட்டியில் இருந்து விலகினார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார் தோனி.

இந்திய அணியின் விவரம் :

விராட்கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டிய, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், பும்ரா, வருண் சக்ரவத்தி, ராகுல் சஹார் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.