பா…! செம பேட்டிங் ; சதம் அடித்து ஜிம்பாபே அணியை திணறடித்த இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ;

ஒருவழியாக நேற்றுடன் ஜிம்பாபே மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று நடந்து முடிந்துள்ளது…!

மூன்றாவது போட்டியின் சுருக்கம் :

இந்தியா டாஸ் மற்றும் பேட்டிங் :

நேற்று மதியம் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்தனர். ஆமாம், அதிலும் தவான் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர்.

ஆனால் எதிர்பாராத வகையில் இருவரும் (தவான் மற்றும் ராகுல்) ஜிம்பாபே பவுலரான பிராட் எவன்ஸிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன்பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடிய சதம் அடித்தார். அதனால் ஜிம்பாபே அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் இன்னொரு பக்கம் சரியாக பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்து வந்துள்ளார் சுப்மன் கில். ஆமாம், இஷான் கிஷான் அரைசதம் அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். பின்பு பேட்டிங் செய்த தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர் போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே சென்றனர்.

ஆனால் சுப்மன் சிறப்பாக விளையாடிய 130 ரன்களை விளாசினார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய கிரிக்கெட் அணியால் 289 ரன்களை அடிக்க முடிந்தது.

இலக்கு மற்றும் ஜிம்பாபே அணியின் பேட்டிங் :

பின்பு 290 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஜிம்பாபே அணி. ஆனால் தீரில் முடிவு தான் காத்திருந்தது. ஆமாம், தொடக்க வீரர்களான கைடனோ மற்றும் இன்னொசென்ட் ஆகிய இருவரும் எதிர்பாராத வகையில் பேட்டிங் செய்யாமல் விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் இந்திய அணியில் எப்படி சுப்மன் கில் ரன்களை அடித்தாரோ, அதேபோல ஜிம்பாபே அணியில் சிக்கந்தர் ரச சிறப்பாக விளையாடி 115 ரன்களை அடித்துள்ளார். ஆனால் அதில் பயனில்லாமல் போய்விட்டது. ஆமாம், ஜிம்பாபே அணி இறுதி வரை போராடிய நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 276 ரன்களை அடித்தனர்.

அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதுமட்டுமின்றி 3 – 0 என்ற கணக்கில் ஜிம்பாபே அணியை வாஷ்-அவுட் செய்துள்ளது இந்திய. கிட்டத்தட்ட ஜிம்பாபே அணி வெற்றிபெற்றிருக்க வேண்டிய நிலையில் விக்கெட்டை இழந்த காரணத்தால் தான் தோல்வி பெற்றுள்ளனர்.

ஆட்ட நாயகன் விருது:

மூன்றாவது போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான சுப்மன் சதம் அடித்துள்ளார் (130) ரன்கள். அதனால் மூன்றாவது போட்டியில் ப்ளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, மூன்று போட்டிகளில் விளையாடிய சுப்மன் கில் 245 ரன்களை அடித்து பட்டியலில் முதலில் இடத்தில் இடம்பெற்ற காரணத்தால் ப்ளேயர் ஆஃப் தி சீரியஸ் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார் சுப்மன் என்பது குறிப்பிடத்தக்கது.