ஐபிஎல் 2021 ; ஐயோ அப்போ ஐபிஎல் போட்டியே அவ்ளோதானா ..! ரசிகர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல் : முழு விவரம் இதோ

கடந்த 9ஆம் தேதி முதல் ஆரம்பித்த ஐபிஎல் 2021, டி-20 லீக் போட்டிகள் சிறப்பான முறையில் ஆர்மபித்து நடைபெற்று வந்தது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் இருந்த நிலையில், திடியென்று யாரும் எதிர்ப்பார்க்க வகையில் ஐபிஎல் 2021 போட்டிகளை ரத்து செய்யவேண்டும் என்ற நிலை வந்துள்ளது.

ஏன் போட்டி ரத்து செய்தது பிசிசிஐ ?

போட்டிகள் நடக்கும் போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் சில வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்தது பிசிசிஐ. அதனால் உடனடியாக அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 3 வீரருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தலா ஒரு வீரருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. அதனால் உடனடியாக ஐபிஎல் 2021 போட்டிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது பிசிசிஐ.

மீதமுள்ள போட்டிகள் எங்கு எப்பொழுது நடக்கும்?

ஐபிஎல் 2021; மொத்தம் 60 போட்டிகளில், 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இன்னும் 31 போட்டிகள் மீதமுள்ளன நிலையில் அனைத்தும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்தியாவில் தான் போட்டிகள் நடைபெறுமா ? போட்டிகள் நடக்கவில்லை என்றால் என்ன ஆகும் ? ஏதாவது பிரச்சனை உள்ளதா ?

ஒருவேளை ஐபிஎல் 2021 மீதமுள்ள போட்டிகள் நடக்கவில்லை என்றால் கண்டிப்பாக 2500 கோடி ரூபாய் பிசிசிஐ -க்கு நஷ்டம் ஏற்படும். அதனால் கூடிய விரைவில் மீதமுள்ள போட்டிகளை நடத்த பிசிசிஐ யோசித்து வருகிறது. ஆனால் நிச்சியமாக இந்தியாவில் நடைபெறாது என்று பிசிசிஐ தலைவர் கூறியுள்ளார்.

ஏனென்றால் மிகப்பெரிய பாதுகாப்புடன், ஐபிஎல் 2021 ஆரம்பித்தது. ஆனால் எப்படி வீரர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது என்பது யாருக்குமே தெரியதா நிலையில் உள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி இந்தியாவில் கொரோனா தாக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.