நான் பேட்டிங் செய்வதற்கு உறுதுணையாக இருந்தது இவர் தான் ; இஷான் கிஷான் ஓபன் டாக் ;

நேற்று லக்னோவில் உள்ள பாரத் ரத்னா மைதானத்தில் முதல் டி-20 போட்டி நடைபெற்றது. அதில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் செய்ய திட்டமிட்டது.

வேறு வழியில்லாமல் முதலில் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் ரன்களை அடித்து தொம்சம் செய்துவிட்டனர் என்பது தான் உண்மை. ஆமாம்…!! தொடக்க வீரர்களான இஷான் கிஷான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதன்பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயருக்கு அவருடைய அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 199 ரன்களை அடித்துள்ளார். அதில் இஷான் கிஷான் 89, ரோஹித் சர்மா 44, ஷ்ரேயாஸ் ஐயர் 57 மற்றும் ஜடேஜா 3 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது இலங்கை.

ஆனால் தோல்வியே மிஞ்சியது. ஆமாம்… இலங்கை அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை என்பது தான் உண்மை. ஆமாம்…! விக்கெட்டை தொடர்ந்து இழந்து வந்தது இலங்கை. ஆனால் இறுதி வரை போராடிய இலங்கை அணி வெறும் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்றுள்ளது.

இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கின்றன. போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இஷான் கிஷான் ; சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான் பல விஷயங்களை கற்றுள்ளேன். ஆனால் என்னுடைய நோக்கம் சரியாக விளையாடுவது தான், அதனை சரியாக செய்யவில்லயோ என்று தெரிகிறது.

நான் இப்பொழுது பந்துகளை பார்த்து கவனித்து விளையாடி வருகிறேன். ஆனால் அதனை செய்ய நான் மிகவும் சந்தோசமாக தான் உள்ளேன். நான் விளையாடும் போட்டிகளில் எங்கு இடைவெளி உள்ளது என்று பார்த்து விளையாடுவதை நான் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இன்னும் சில நாட்கள் தான் உள்ளது உலகக்கோப்பை போட்டிக்கு.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தயாராக வேண்டும். அதுமட்டுமின்றி போட்டியில் விளையாடும் போது ஷ்ரேயாஸ் ஐயர் மிடில் கேப்பை பார்த்து விளையாட சொன்னார். அதனை பார்த்து விளையாடினால் சுலபமாக பவுண்டரி அடிக்க முடியும் என்று சொன்னார் என்று கூறியுள்ளார் இஷான் கிஷான்.